பக்கம்:மதன கல்யாணி-1.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 மதன கல்யாணி

ஏமுேழு ஜென்மத்திலும் குளிர்ந்திருக்கும். ஆனால், இதில் இன்னொரு விஷயமிருக்கிறது. மைனருடைய மற்ற போஷகர்கள் சாஸனப்படியேதான் கலியாணத்தை நடத்த வேண்டும் என்று சொல்லுவார்களோ என்னவோ?” என்றாள்.

கல்யாணியம்மாள், “அவர்களே முன்னொருதரம் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்திருக்கிறார்கள். பையன் அதிகமான பணச் செலவு செய்கிறதைக் கண்டு அவர்களே என்னிடம் வந்து, நாங்கள் எல்லோரும் மாரமங்கலத்துக்காவது போக வேண்டும், அல்லது, கலியாணத்தையாவது செய்துவிட வேண்டும்; இப்படி விட்டிருந் தால் பையன் கெட்ட வழியில் இறங்கிவிடுவான் என்று கூறினார்கள். அதை நான் பையனிடம் தெரிவித்தேன். அவன் இந்த ஊரை விட்டே போக மாட்டானாம்; கலியாணம் செய்து கொள்ளுவானாம். ஆகையால், போஷகர்கள் இதற்கு எளிதில் இணங்கி விடுவார்கள். இந்த விஷயத்தில் ஆட்சேபனை செய்பவர்கள் என்னைத் தவிர, வேறே ஒருவருமில்லை. போஷகர்கள் வரவழைத்து, நான் ஒரு வார்த்தை சொன்னால், அவர்கள் அதற்கு உடனே இணங்கி விடுவார்கள். அதில் கொஞ்சமும் கஷ்டமில்லை” என்றாள்.

அதைக் கேட்ட மீனாகூஜியம்மாள், “நிரம்ப சந்தோஷம். பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி ஆகிவிட்டது, இந்த விஷயத்துக்கு நீங்கள் எப்போது இணங்குவீர்களோ என்று நான் காத்திருக்

கிறேன்” என்றாள்.

கல்யாணியம்மாள், “சரி, செய்வதை எப்போதாவது செய்து தானே திர வேண்டும். பையனுடைய மனதையும் பெண்ணி னுடைய மனதையும் அநாவசியமாக வருத்துவதில் என்ன உபயோகம்; இறந்து போன என்னுடைய எஜமானர் இதை எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? பையனுடைய மைனர் பருவம் நீங்குவதற்குள், கண்மணியம்மாள் என்ற பெண் அவனுக்கு சம்சாரமாக ஆவதற்கு தயாராக இருப்பாள் என்பதை அவர்கள் எதிர்பார்க்க நியாயமும் இல்லை. அவர்கள் இப்போது உயிரோ டிருந்தால், போன வருஷமே இந்தக் கலியானத்தை முடித்துவைத் திருப்பார்கள். ஆகையால், அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/220&oldid=649670" இலிருந்து மீள்விக்கப்பட்டது