பக்கம்:மதன கல்யாணி-1.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 மதன கல்யாணி

ஒரு நாளும் நீங்கள் இப்படி வெளியில் தங்கினதில்லையே! வழியில் போன போது ஏதாகிலும் விபத்து நேர்ந்ததோ என்னவோ ஒன்றும் தெரியவில்லையே என்று நாங்கள் இவ்வளவு நேரம் எவ்வளவு தூரம் பயந்து விட்டோம் தெரியுமா! நீங்கள் அந்த மதன கோபாலன் விஷயமாகவே எங்கேயோ போயிருக்கிறீர்கள் என்று அக்காள் சொல்லிக் கொண்டே இருந்தாள், அதற்காகப் போயிருந் தால் இவ்வளவு நேரம் தாமதிக்க வேண்டியதில்லையே என்று நான் மாத்திரம் சந்தேகித்துக் கொண்டே இருந்தேன். இரண்டாவது வேளைக்குக்கூட நீங்கள் தாகத்துக்கு சாப்பிடவும் வரவில்லை ஆகையால், என் மனசு பலவகையில் பயந்துவிட்டது” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், அவளது அன்பையும் பேதமையையும் கண்டு நகைப்பவள் போல இரக்கமாக நகைத்து “சேச்சே, அப்படி ஒன்றும் வழியில் ஏற்படவில்லை. நான் இந்த அற்ப நாயான மதனகோபாலனை ஒரு பொருட்டாக மதித்து, அதற்காக ஒரு பகல் நேரத்தை எல்லாம் வீணாக்குவேனே நான் இப்போது சொல்லப் போகும் சங்கதி உங்களுக்கு நிரம்பவும் ஆச்சரியகரமாக இருக்கும். இந்த மதனகோபாலன் இங்கே நம்முடைய பங்களாவில் மாத்திரம் அயோக்கியத்தனமாக நடந்தான் என்று நாம் நினைத்தோமே. அவன் பல இடங்களில் இப்படியே செய்திருக்கிறானாம். நேற்று சாயுங்காலம் அவன் இங்கே வந்ததற்கு முன், மீனாகூஜியம்மாளுடைய பங்களாவிலும் இப்படி நடந்து கொண்டானாம்; கண்மணியம்மாளுக்கு அவன் வீணை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது; அவன் கண்மணியம்மாளிடத்தில், ஏதேதோ தகாத வார்த்தைகளை எல்லாம் பேசத் தொடங்கினானாம். அதை உணர்ந்த மீனாகூஜி யம்மாள் அவனைத் திட்டி, துடைப்பக் கட்டையால் அடிக்காதது குறையாக, அவனை வெளியில் அனுப்பிவிட்டார்கள். அவன் நேற்று தினம், நல்ல பனங்கள்ளில் சரியாக ஒரு குடம் குடித்து விட்டு வந்தானாம், அந்த வெறியினாலே தான் அவன் ஏதோ உடம்பு அசெளக்கியமாக இருக்கிறது என்று சொல்லி பாசாங்கு செய்ததன்றி தலைகால் தெரியாமல் மயங்கி, கண்ட பெண் பிள்ளைகளை எல்லாம் பிடித்திழுக்கத் தொடங்கி விட்டான். நானாவது, பேசாமல் இருந்து விட்டேன்; மீனாகூஜியம் மாள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவசரமாக அவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/226&oldid=649681" இலிருந்து மீள்விக்கப்பட்டது