பக்கம்:மதன கல்யாணி-1.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 235

ஆனால், அவளது மனதில் ஒரு விஷயத்தில் மாத்திரம் குழப்பம் இருந்து கொண்டே வந்தது. எவ்வாறெனில், கருப்பாயி கூறிய வரலாற்றிற்கும் பத்திரிகையில் வந்திருந்த வரலாற்றிற்கும் ஒன்றிற் கொன்று சம்பந்தமில்லாமலும் தோன்றியது; இரண்டும் முரண் படுவதாகவும் தோன்றின. இரவு பன்னிரண்டு மணிக்கு கருப்பாயி யின் வீட்டிலிருந்து தப்பியோடிய மைனர், அதன் பிறகு இரண்டு மணிக்கு பாலாம்பாளது பங்களாவுக்குப் போவது சாத்தியமான காரியமாகத் தோன்றியது. ஆனால் அவன் அங்கே இருந்து தப்பித்து ஒடிய பிறகு திருடர்களைச் சேர்த்துக் கொண்டு பாலாம்பாளது பங்களாவில் நுழைவது அவனுக்கு எப்படி சாத்தியப்பட்டது? அவனோடு பங்களாவில் நுழைந்த திருடர் வேறே திருடர்களா, அல்லது, இதே திருடர்களா என்ற ஐயம் அவளது மனதில் உண்டாயிற்று; நிற்க அவன் பாலாம்பாளைப் பற்றிய விவரங்களை எல்லாம் அறிந்து சொல்லும்படி கருப்பாயி யிடம் கேட்டு, அதன் பொருட்டே அவளது வீட்டிற்கு வந்திருந்தான் என்று கருப்பாயி சொன்னதில் ; அதற்கு முன் அவனுக்கும் பாலாம்பாளுக்கும் எவ்விதமான சம்பாஷணை யும் நடக்கவில்லை என்பது தெரிவதால், அவன் திருடர்களை முன்பாகவே அமர்த்தி வைத்து அவளை பலாத்காரமாக எடுத்துப் போக முயன்றான் என்பது அசம்பாவிதமாக இருந்தது. தன்னிடம் கருப்பாயி பொய் சொல்லி, தன்னை ஏமாற்றி ஆறாயிரம் ரூபாயைப் பிடிங்கிக் கொண்டு போயிருப்பாளோ என்ற சந்தேகமும் கல்யாணியம்மாளது மனதில் தோன்றியது. தங்களிடம் அவள் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டாள் என்ற ஒரு வகையான உறுதியும் இடையிடையில் தோன்றி மனதைக் குழப்பியது. ஒருகால் மைனர் திருடர்களை அமர்த்தி வைத்து விட்டு, இரவு 2-மணி வரையில் தான் தங்கி இருப்பதற்கு இடம் கிடைக்கும் என்ற நினைவினால் ஒன்றையும் அறியாதவனைப் போல, கருப்பாயியிடம் பாசாங்கு செய்து, அவளது வீட்டில் போய் படுத்திருப்பானோ என்றும், அப்போது தற்செயலாக, வேறு திருடர்கள் அவனது பொருட்களைக் கொள்ளை அடிக்க முயன்றிருப்பார்களோ என்றும் கல்யாணியம்மாள் ஐயமுற்றாள். அவ்வாறு கருப்பாயின் மீதும், மைனரின் மீதும், திருடர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/253&oldid=649737" இலிருந்து மீள்விக்கப்பட்டது