பக்கம்:மதன கல்யாணி-1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மதன கல்யாணி

அந்த மனிதன். அது எனக்கு நன்றாகத் தெரியாது. சுமார் ஒர் ஆயிரம் இரண்டாயிரம் கிடைக்கும் - என்றான்.

அந்தச் சமயத்தில், உள்ளே சென்ற மனிதன் திரும்பி விரைவாக வந்து, ஒரு திறவுகோலால் பூட்டைத் திறந்து விட்டு, “வாருங்கள்” என்று பணிவாகக் கூற, சிவஞான முதலியார் அவனை நோக்கி, “பெட்டி வண்டியை உள்ளே கொண்டு வரலாம் அல்லவா?” என்றார். அந்த மனிதன், “ஆகா! கொண்டு வரலாம்” என்றான். உடனே வண்டிக்காரன், கடிவாளவாரைப் பிடித்து குதிரையை உள்ளே நடத்திக் கொண்டு சென்றான். லாந்தர் வைத்திருந்தவனும் சிவஞான முதலியாரும் வண்டிக்கு முன்னாக நடந்தனர். திறவு கோல் கொணர்ந்தவன் பின்னால் நின்று கதவை மறுபடியும் சாத்திப் பூட்டிக் கொண்டு வண்டியைப் பின் தொடர்ந்து வந்தான். அடுத்த நிமிஷம் பெட்டி வண்டி, கட்டிடத்தின் பக்கத்தில் போய் நின்றது. வண்டியின் கதவைத் திறந்து கொண்டு கல்யாணியம் மாள் கீழே இறங்கினாள். திறவுகோலை வைத்திருந்தவன், லாந்தரையும் தனது கையில் வாங்கிக் கொண்டு, சிவஞான முதலி யாரையும் கல்யாணியம்மாளையும் அழைத்துக் கொண்டு மேன் மாடத்திற்குச் சென்றான்.

அப்போது பாலாம்பாள் என்ன நிலைமையில் இருந்தாள் என்பதை கவனிப்போம். முதல் நாள் இரவில் கொள்ளைக்காரர்கள் கதவைத் தள்ள, கட்டிலின் மேல் இருந்த மைனர் கீழே விழுந்த போது, அவனது உடம்பில் வலுவான அடிபட்டது. ஆனாலும், திருடர்கள் உள்ளே வந்து விட்டார்கள் என்ற பெரும்பிதியில், அந்த அடி அவனது உடம்பில் உறைக்காது போனதன்றி, தான் திருடர்களது திருஷ்டியில் படாமல் எங்காகிலும் ஒளிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணம் அவனது மனதில் எழுந்து அவனைத் துண்டியது. அவன் பலவகைப்பட்ட சாமான்களுக் கிடையில் கிடந்தான் ஆதலால், அவன் தனது கையை நாற்புறங் களிலும் நீட்டித் தடவ, பெருத்த மெத்தை ஒன்று கவிழ்ந்து வீழ்ந்து இருந்ததை உணர்ந்து, மெல்ல நகர்ந்து, அந்த மெத்தையின் கீழே சென்று ஒளிந்து கொண்டிருந்தான். திருடர்கள் விளக்கைக் கொளுத்தியதற்கு முன்பாகவே, அவன் அவ்வாறு மறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/266&oldid=649766" இலிருந்து மீள்விக்கப்பட்டது