பக்கம்:மதன கல்யாணி-1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 26?

போய், கச்சேரியில் வந்து உனக்கு விரோதமாக வாதாட வேண்டும் என்னும் எண்ணத்தோடு நான் வந்தவனல்ல. இதோ இருக்கிற இந்த அம்மாள், அந்தப் பையனுடைய தாயார். நான் அந்தப் பையனுடைய போஷகர்களுள் ஒருவன். இவர்கள் நிரம்பவும் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்த பெருத்த சமஸ்தானாதிபதி. அந்தப் பையன் இவர்களுடைய ஒரே மகன். அவன் யெளவனப் பருவம் உடையவன் ஆகையால், உன்னைப் போன்ற நல்ல சுந்தரவதிகளைக் கண்டால், ஆசைப்படுவது இயற்கை தான். அது அவனுடைய குற்றமாகாது. உன்னுடைய அற்புதமான அழகும், திறமையும், நற்குணமே அதற்குக் காரணம்; அதனால் பையன் உன்னிடத்தில் வந்து, ஏதாவது தகாத விஷயங்களைச் சொல்லி இருக்கலாம். அதைப்பற்றி சந்தேகமே இல்லை. ஆனால், அவன் அதற்காக திருடர்களைக் கொணர்ந்து இப்படிப்பட்ட அக்கிரமங் களைச் செய்விக்கக் கூடியவனல்ல. திருடர்கள் வந்தது தற்செயலாக நடந்த காரியமாகவே இருக்க வேண்டும். இந்தப் பையனுக்கு நாங்கள் அதிசீக்கிரத்தில் கலியாணம் நடத்த உத்தேசித் திருக்கிறோம். அப்படிப்பட்ட சமயத்தில், அவன் மேல் இவ்விதமான வழக்கு வருவது எங்களுக்கு நிரம்பவும் மானஹானி யாய் இருப்பதோடு, அவனுடைய கலியாணத்துக்கும், ஒரு பெருத்த இடைஞ்சலாக இருக்கிறது. அந்தப் பையனை தண்டனைக்குக் கொண்டு போவதில் உனக்கும் எவ்விதமான லாபமும் உண்டாகப் போகிறதில்லை. ஆகையால், நாங்கள் இங்கே முக்கியமாக எதற்காக வந்தோம் என்றால், அந்தப் பையன் உன்னிடத்தில் ஏதாவது தவறாக நடந்து கொண்டிருந்தால், அவனுக்காக உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்கும், உனக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் அதனாலே தான் ஏற்பட்டதென்று நீஅபிப்பிராயப்பட்டு, அதன் பொருட்டு ஏதாவது பணம் பெற்றுக் கொள்ள நீ ஆசைப்பட்டால், அதையும் உனக்குக் கொடுத்து, அந்தப் பையனைத் தப்புவிக்கும்படி கேட்டுக் கொள்வதற்குமே அன்றி வேறல்ல. ஆகையால், நீ எங்களைப் பற்றி வித்தியாசமாக நினைக்காதே அம்மா! எங்களுடைய பையனாலும், திருடர்களா லும், நீ எவ்வளவோ கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் ஆளாகி இருக்கையில், அவைகளை எங்களால் ஆன வரையில் நிவர்த்திக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/279&oldid=649792" இலிருந்து மீள்விக்கப்பட்டது