பக்கம்:மதன கல்யாணி-1.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 மதன கல்யாணி

வழி தேடவேண்டுமே அன்றி, இந்தச் சமயத்தில், நாங்கள் மேலும் உனக்குத் துன்பமுண்டாக்க வருவோமா? நாங்கள் அப்படிச் செய்யக் கூடியவர்கள் அல்ல இந்த அம்மாளுடைய சமஸ்தானம் ஒரு மகாராஜாவின் ஆதீனத்துக்கு சமமானது. இவர்கள் சாதாரணமாக இந்த இடத்துக்கு வரக்கூடியவர்கள் அல்ல. உண்மையில் நடந்த விவரங்களைக் கொஞ்சமும் விடாமல் நீ தெரிவி. நாங்கள் உன்னுடைய பிரியப்படி நடந்து கொள்ளு கிறோம் - என்று தேனொழுக மொழிந்தார்.

பாலாம்பாள்:- (சிறிது யோசனை செய்து) ஒகோ! அப்படியா! அவர் இந்த அம்மாளுடைய பிள்ளையா! நான் பார்த்த வரையில் அவர் இப்படிப்பட்ட மேலான இடத்துப் பிள்ளையாகக் காணப் படவில்லையே! அவருடைய பேச்சும் நடத்தையும் சுத்தக் கேவலமாக அல்லவா இருந்தன. இரண்டு மூன்று நாள்களாக அவர் என்னுடைய வேலைக்காரன் ஒருவன் மூலமாக எனக்கு ஆயிரம் பதினாயிரம் கொடுப்பதாகவும், தனக்கு வைப்பாட்டியாக இருக்கும்படியாகவும் சொல்லிச் சொல்லி அனுப்பினார். நான் குடும்ப ஸ்திரீ என்றும், அப்படிப்பட்ட கேவலமான நடத்தைக்கு உடன்படக் கூடியவள் அல்ல என்றும், இனி என்னுடைய நினைவையே மறந்து விடும்படியாகவும் நான் கண்டிப்பான மறுமொழி சொல்லி அனுப்பி விட்டேன். நேற்று இரவு ஒரு மணிக்கு நான் நாடகக் கொட்டகையில் இருந்து இங்கே வந்து படுத்துக் கொண்டேன். அவர் என்ன செய்திருக்கிறார்? அந்த வேலைக்காரனைக் கைவசப்படுத்திக் கொண்டிருந்தார் போலிருக் கிறது. என்னிடம் பேச வேண்டும் என்று யாராவது வந்தால், என்னுடைய அனுமதி இல்லாமல் உள்ளே விடவேண்டாம் என்று நான் கண்டிப்பாக என்னுடைய வேலைக்காரர்களுக்குச் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் அந்த வேலைக்காரன் என்ன செய்தான் தெரியுமா? நேற்று ராத்திரி ஒரு மணிக்கு நான் படுத்துக் கொண்ட போது என்னுடைய படுக்கை அறையின் வாசலண்டை வந்து நின்று, “அம்மா! உங்களுடைய சிநேகிதர் ஒருவரை நீங்கள் இப்போது இங்கே வரும்படி சொல்லி இருந்தீர்களாம்; அவர் இதோ வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கொண்டே, கதவைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/280&oldid=649796" இலிருந்து மீள்விக்கப்பட்டது