பக்கம்:மதன கல்யாணி-1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 மதன கல்யாணி

உன்னுடைய தேகபோஷணைச் செலவுக்காக ரூபாய் ஐயாயிரம் கொடுத்து வர நான் கட்டுப்படுகிறேன். உன்னுடைய வயிற்றில் குழந்தைகள் ஜனிக்குமானால் அவைகள் ஒவ்வொன்றுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க ஒப்புக் கொள்ளுகிறேன்.

இன்னம் பத்து நாட்களுக்குள் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு நீ கேட்கும் ஆபரணங்களை வாங்கித் தரக் கடமைப்பட்டவனாய் இருக்கிறேன்; தவிர என்னுடைய மைனர் பருவம் நீங்கி, நான் சமஸ்தானத்தை ஒப்புக் கொள்ளும் தினத்தன்று, உனக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஆபரணங்கள் தரித்து, சமஸ்தானத்து அரண் மனையில் பட்டமகிஷியின் ஸ்தானத்தில் கொண்டு போய் உன்னை வைத்துக் கொள்ள இதன் மூலமாக நான் கட்டுப்படு கிறேன். இந்த நிபந்தனைகளில் எதையாகிலும் நான் செய்யத் தவறுவேனாகில் நீ சிவில் கிரிமினல் முதலிய நியாய ஸ்தலங்களின் உதவியைக் கொண்டு இந்த நிபந்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள உனக்கு இதன் மூலமாக அதிகாரம் உண்டாக்கிக் கொடுக்கிறேன். இந்தப் பத்திரம், சட்டப்படி விவாகத்துக்கு சமதையாக ஆகாதென்று கோர்ட்டார் தீர்மானித்தாலும், அல்லது, நான் இதற்கு மாறாக, அக்கினி சாட்சியாக இன்னொரு பெண்ணைக் கலியானம் செய்து கொண்டாலும், அது வரையில் உன்னுடைய கற்பை அழித்ததற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்க இதன் மூலமாக நான் கட்டுப்படுகிறேன். இந்தப் பத்திரத்தை திரிகரண சுத்தியாக நான் நல்ல அறிவோடிருக்கையில் என் மனப்பூர்வமாக எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

இப்படிக்கு எழுதியதுள்பட, மாரமங்கலம் மைனர்............................துரை

-என்று எழுதப்பட்டிருந்த பத்திரத்தை சிவஞான முதலியார் படித்தார்; அவரது மனதிலும் கல்யாணியம்மாளது மனதிலும் பெருத்த வியப்பும் திகைப்பும் எழுந்து அவற்றை முற்றிலும் குழம்பச் செய்தன. அவ்வளவு சிறிய பையனான மைனர், பெண் மோகங் கொண்டு, எவ்வளவு அபாரமான காரியத்தைச் செய்திருக் கிறான் என்பதைக் காண, அவர்கள் இருவரும் பெருத்த திக்பிரமை கொண்டவராய் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனம் சாதித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/290&oldid=649815" இலிருந்து மீள்விக்கப்பட்டது