பக்கம்:மதன கல்யாணி-1.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மதன கல்யாணி

தெரியவில்லை. எவ்வளவோ பெருத்த சமஸ்தானத்தின் அதிகாரியான பெருத்த சீமாட்டி தமக்கு வந்திருக்கும் துன்பத்தையும் மானஹானியையும் விலக்கும்படி இவ்வளவு தூரம் நயந்து கேட்கும் போது, கொஞ்சமும் இரக்கமின்றி நிர்தாrண்யமாகப் பேச, என் மனம் ஒப்பவில்லை. ஆனால், மைனர் என் விஷயத்தில் செய்த கொடுமையான காரியங்களை நினைத்தால், அவருடைய விஷயத்திலும் இரங்குவதாக என்ற ஒரு பதைப்பு உண்டாகிறது. அதுவும் தவிர, இவ்வளவு நீண்ட காலமாக, என்னைத் தம் உயிர் போலப் பாதுகாத்து, ஏராளமான தம்முடைய சம்பாத்தியங்களை எல்லாம் என் விஷயத்தில் திரணமாக மதித்து வாரி இறைத்து, என்னை சந்தோஷப்படுத்து வதையே பெருத்த பாக்கியமாக மதித்திருக்கும் அந்த மனிதரை விலக்குவதென்றால், அதற்கு என் மனம் எளிதில் இடங் கொடுக்குமா? இப்போது என்னுடைய நிலைமை மிகவும் தரும சங்கடமானதாக இருக்கிறது. தங்களுடைய பெருத்த துன்பத்தைப் பார்த்தால் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இருக்கிறது; என்னுடைய எஜமானுடைய பரிதாபகரமான நிலைமையை நினைத்தால், அவரைக் கைவிடாமல், அவருடைய வேண்டுகோளுக்கிணங்க வேண்டும் என்றும் இருக்கிறது. இதை எப்படி முடிவுகட்டுகிறது? தாங்கள் வக்கீல் ஆதலால் தான் நியாய அநியாயங்களை எடுத்து என்மனம் திருப்தி அடையும்படி சொல்லுவீர்களானால், அதன்படி நான் உடனே செய்து விடுகிறேன்” என்றாள்.

அதைக் கேட்ட சிவஞான முதலியார் சிறிது தத்தளித்தார் ஆனாலும், அவ்வளவு தூரம் வழிக்கு வந்திருப்பவளை விடக் கூடாதென்றும், ஏதேனும் ஒருவிதமான நியாயத்தை எடுத்துச் சொல்லி, அவளது சம்மதியைப் பெற்றுவிட வேண்டும் என்று நினைத்தவராய், “அம்மா குழந்தாய்! நீ தயாள குணமும் நடுநிலை தவறாத தர்ம குணமும் உள்ள மனதைக் கொண்டவள் என்பது நன்றாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட உத்தமகுணம் எல்லாரிடத் திலும் இருப்பது அருமை. உன்னைப்பற்றி நான் அடையும் சந்தோஷமும் பெருமையும் இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/298&oldid=649829" இலிருந்து மீள்விக்கப்பட்டது