பக்கம்:மதன கல்யாணி-1.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 287

பெக்டர் வந்து வாக்குமூலம் கேட்டால், நீ என்ன சொல்லப் போகிறாய்?” என்றார்.

பாலாம்பாள். நீங்கள் முதலில் சொல்லிக் கொடுத்தபடியே சொல்லி, அவரை உடனே விடுவிக்கும்படி செய்கிறேன். இனி மேல் அந்தப் பொறுப்பு என்னுடையதல்லவா? தாங்கள் வருவதற்குள், அவரை மீட்டு அழைத்து வந்து இங்கே இருக்கச் செய்கிறேன். இந்த அகாலத்தில் நீங்கள் தேனாம்பேட்டைக்குப் போவதுகூட எனக்குச் சம்மதமில்லை. இங்கேயே வசதியாகப் படுத்துக் கொள்ளச் சொல்லி விடுவேன். ஆனால், அதில் ஒர் இடைஞ்சல் இருக்கிறது; நான் இங்கே தனிமையில் இருக்க மிகவும் அஞ்சினேன் ஆகையால், என்னுடைய நண்பரான நாடக எஜமான், இன்று வி.பி. ஹாலில் நாடகம் முடிவடைந்த உடனே, இங்கே வருவதாகச் சொல்லி இருக்கிறார்; தாங்கள் இருப்பதை அவர் காணவும், தாங்கள் இன்னார் என்றும், இன்ன காரியமாக வந்தீர்கள் என்றும் நான் சொல்லவும் நேரும். அது என் மனதுக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால், நாளைமுதல், அந்த நாடகத்தையும், அவருடைய நட்பையும் நான் விட்டொழிக்கப் போகிறவள் ஆகையால், அவரிடம் நம்முடைய ரகசியங்களை எல்லாம்

எதற்காக வெளியிடுகிறது? - என்றாள்.

சிவஞான:- சரியான காரியம். ஆனால் இப்போது நீ சொன்னதி லிருந்து எனக்கு இன்னொரு கவலை உண்டாகிவிட்டது. உன்னுடைய பழைய நண்பரும், உனக்கு இது வரையில் பேருப காரியாக இருந்து வந்தவருமான அவரை நீ மறுபடியும் காணும் போது உன்னுடைய மனம் ஒருவேளை அவர் விஷயத்தில் இரக்கம் கொண்டாலும் கொண்டுவிடும். அதனால், நீ உன்னுடைய மனதை மாற்றிக் கொள்ள நேர்ந்துவிடும். அதற்காக நீ ஒரு காரியம் செய்ய வேண்டும்; இதனால் உன்னை நான் நம்பவில்லை என்று நினைத்துவிடாதே. உன்னுடைய மனது தயாளமான மனதாகை யால், நான் இதைச் சொல்லுகிறேன் - என்றார்.

பாலாம்பாள்:- நான் ஒருதரம் வாக்குக் கொடுத்தால், இந்த உலகம் அழிந்தாலும், என்னுடைய அந்த உறுதி மாத்திரம் மாறாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/305&oldid=649846" இலிருந்து மீள்விக்கப்பட்டது