பக்கம்:மதன கல்யாணி-1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் #5

பான கருங்காலி நாற்காலிகளில் எங்கு பார்த்தாலும் வைரக் கடுக்கன்களும் வைரக் கம்மல்களும், ஜரிகைகளும், பட்டாடை களுமே மயமாகத் தோன்றின. பெருமையால் நிமிர்ந்த ராவ்பகதூர் களும் திவான் பகதூர்களும், செல்வத்தால் செருக்கிய செட்டிமார் களும், வாய்மையால் வலுத்த வக்கீல்மார்களும், அலங்காரப் பிரியர்களும், டாம்பீகர்களான கோலாகலப் புருஷர்களும், மனமோகன சுந்தர ரூபங்களைப்பெற்ற யெளவனப் பெண்டீரும், புருஷ்ரும், சிரித்த முகமும் இனித்த சொற்களுமாகக் காணப்பட்டு இன்பமயமாக இருந்தனர். ஆனால் வெளிமயக்கான அந்தப் பிரகாசத்திற்குள் நுழைந்து அவர்களது அந்தரங்கமான மனோ நிலைமையை ஆராயப் புகுந்தால், அங்கு உண்மையான ஆனந்தமும், திருப்தியும், சாந்தமான அமைதியும் இருக்கக் காண்பது மாத்திரம் சந்தேகம். தாங்கள் உண்மையில் பரம ஏழ்மை நிலைமையில் இருக்கிறோம் என்பதை மறைத்து, தாங்கள் பெரிய முதலாளிகள் என்னும் எண்ணத்தைப் பிறர் மனதில் உண்டாக்கும் பொருட்டு ஜரிகை வேஷ்டிகளும் பட்டுச்சட்டைகளும் பெருத்த தலைப்பாகைகளும் அணிந்திருந்தவர் பல்லோர். மகா கொடிய பொறாமைகளையும் கவலைகளையும் கொண்ட தங்களது மனதை வெளியில் காட்டாமல் மறைப்பதன் பொருட்டு புன்னகை செய்தோர் பலர். ஜாதி ரோஜா மல்லிகை முதலிய புஷ்பங்களும் வைர ஆபரணங்களும் நிறைந்த சிரங்களுக்குள் பித்தமும் பேதைமையும் துர்க்குணங்களும் வெறியும் அஞ்ஞான இருளும் நிறைந்திருக்கப் பெற்றவர் அநந்தம். வேறு பலரிடத்தில் விலை மதிப்பற்ற பதக்கங்களும், முத்து மாலைகளும், வைர சரங்களும் அழகு செய்த மார்புகளுக்குள் துராசைகளும் பலவகைப்பட்ட மோக விகாரங்களும் கொந்தளித்துக் கொண்டிருந்தன. புது நாகரிகம் கற்ற பலர் தங்களது முகங்களில் வெண்மையான மாவைப் பூசி நாடக வேஷங்கள் போல மினுக்கி, காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தனர்; ஆகவே, அந்த அழகிய மாளிகையில் இரண்டு வகையான நாடகங்கள் நடிக்கப்பட்டன. மேடை மீதிருந்த நாடகக்காரர்கள் குலேபக்காவலியும், கூடத்தில் இருந்த ஜனங்கள் பிரபஞ்ச லீலா விநோதமும் நடத்திக் கொண்டிருந்தனர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/33&oldid=649895" இலிருந்து மீள்விக்கப்பட்டது