பக்கம்:மதன கல்யாணி-1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மதன கல்யாணி

கல்யாணி:- அது மாத்திரமல்ல. உனக்கு மாதமாதம் கொடுக்கிற பணத்தையும் நிறுத்தி விடுவார்கள். -

மைனர்:- கவலையில்லை. ஒன்றுக்கு இரண்டாய் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்குகிறேன் - என்றான்.

அதைக் கேட்டவுடன், கல்யாணியம்மாளது கோபம் அடக்க முடியாத நிலைமையை அடைந்தது; அவள் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து நின்று அவனை உருட்டி விழித்து, “இவ்வளவு துர்ப்புத்தியா உனக்கு? நீ என் சொல்லை மீறித்தான் நடக்கப் போகிறாயா?”

மைனர்:- நான் இந்த ஊரிலே தான் இருக்கப் போகிறேன். என்னை வீணில் தொந்தரவு செய்ய வேண்டாம்.

கல்யாணி:- இது தொந்தரவல்ல. உத்தரவு. நான் உத்தரவு செய்கிறேன். நீ கீழ்ப்படிய வேண்டும் - என்று அதட்டிக் கூறினான்.

அதைக் கேட்ட மைனர், “ஆகட்டும். அப்படியே செய்வோம். உத்தரவுப்படி, மேல்படிகிறோம்” என்று குறும்பாக மொழிந்து அலட்சியமாக வேறு திக்கை நோக்கினான்.

அதைக் கண்ட கல்யாணியம்மாளது மனதில் கரைகடந்த கோபமும், விசனமும் பொங்கி எழுந்தன. அவள் மிகவும் வெறுப்பாக அவனை நோக்கி, “சே! இவ்வளவு கேவலமான குணமுடைய மனிதனா நீ ஆகா! நீ குழந்தையாய் இருந்த போது உனக்காக நான் பட்டபாடுகள் இன்னின்னவை என்று நீ அறிவாயானால் - உனக்கு நான் என்னென்ன செய்திருக்கிறேன் என்பதை நீ உணர்வாயானால், நீ இப்படி நடந்து கொள்வாயா! ஆனால், அவைகளை நீ அறிந்தாலும், உன் புத்தி மாறாது” என்று கூறினாள்.

மைனர்:- (மிகவும் அலட்சியமாக) சரி; மறுபடியும் பழைய கதை ஆரம்பமோ? நான் குழந்தையாய் இருந்த போது யாரோ என்னைத் திருடிக் கொண்டு போனானாம். என்னை மீட்டுக் கொண்டு வந்து விட்டார்களாம். தொட்டத்துக்கெல்லாம் அந்தப் பெருமையையே எடுத்துப் பேசுகிறது. இல்லாவிட்டால், ஊரில் உள்ள தாய்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/76&oldid=649987" இலிருந்து மீள்விக்கப்பட்டது