பக்கம்:மதன கல்யாணி-2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மதன கல்யாணி

லும் ஏற்படாத விலக்க இயலாத ஒரு பற்றும் கரைகடந்த பிரியமும் அவள் ஒருத்தியிடத்தில் மாத்திரம் தன் மனதில் ஏற்பட்டிருப்பதை அவன் அடிக்கடி உணர்ந்தான் ஆனாலும், தான் கேவலம் கீழ் நிலைமையில் உள்ள ஓர் ஏழை மனிதன் ஆகையால், தான் அவளது விஷயத்தில் சாதாரண நட்பைத் தவிர வேறு எவ்விதமான சம்பந்தத்தையும் எதிர்பார்ப்பது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதைப் போன்றதென்று அவன் அடிக்கடி எண்ணித் தனது மனத்தைக் கண்டித்துக் கொள்ளுவான்; இணையற்ற வனப்பும் உலகத்திலுள்ள மற்ற எவருக்கும் ஒர் உதாரணமாக அமைந்துள்ள நற்குணமும் வாய்ந்த அந்த மடமங்கை தான் வேறொரு புருஷன் மீது காதலுற்றிருப்பதாகக் கூறிய நாள் முதல் அப்படிப்பட்ட ஒப்பற்ற நிதியான அந்தப் பெண்மாணிக்கத்தை அடையக் கொடுத்து வைத்துள்ள பாக்கியவான் யாவனோ என்று மதனகோபாலனது மனம் நினைத்து நினைத்து, அவனாக இருப்பானோ இவனாக இருப்பானோ என்று சிற்சில மனிதரை தனக்குத் தானே வரித்துக் கொண்டான்; ஆனால் அந்த விஷயத்தில் அவன் எவ்விதமான முடிவிற்கும் வரமாட்டாதவ னாய் அவளது வாயிலிருந்தே அந்த உண்மையை அறிந்துவிட வேண்டும் என்று பெரிதும் ஆவல் கொண்டிருந்தான்; ஏனெனில் அவளால் விரும்பப்பட்ட பூமான் யாவன் என்பதை தான் அறிந்து கொண்டால், அதை கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரிடத்தில் தெரிவித்து, அவரது உதவியால் அவர்களது மணத்தை முடித்து அதிசீக்கிரத்தில் அவர்களை சந்தோஷ சாகரத்தில் ஆழ்த்திவிட வேண்டும் என்பதையே அவன் தனது முதற் கடமையாக மதித்திருந்தான்; ஆதலால் தான் அப்போது அந்த விஷயமாகச் சென்றது அவனுக்கு நிரம்பவும் உற்சாகமாக இருந்தது. அவன் அதே நினைவில் ஆழ்ந்தவனாய் அப்படி இப்படித் திரும்பாமலும், அப்போது அந்தப் பாதையில் வேறே யார் நடக்கிறார்கள் என்பதைக் கவனிக்காமலும் சென்று கொண்டே இருந்தான்.

அவன் மிகவும் சமீபமான ஏதேனும் ஓர் இடத்துக்குப் போய் விட்டுத் தனது ஜாகைக்குத் திரும்பி விடுவான் என்றும், அதற்குள் தான் எப்படியும், அவனைச் சுட்டுவிட துரைராஜா ஆரம்பத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/100&oldid=645824" இலிருந்து மீள்விக்கப்பட்டது