பக்கம்:மதன கல்யாணி-2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 97

நினைத்திருந்தான். ஆனால் மதனகோபாலன், மவுண்டு ரோட்டின் வழியாக, நெடுந்துாரம் போய்க் கொண்டிருந்ததைக் காண, அவன் தேனாம்பேட்டைக்கே போகிறான் என்று துரைராஜா யூகித்துக் கொண்டவனாய், தனது எண்ணம் எப்படியும் நிறைவேறி விடும் என்று நினைத்து இன்புற்றவனாய்த் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். மதனகோபாலன் கல்யாணியம்மாளிடத்திலும் வேறு சில பங்களாக்களிலும் தாறுமாறாக நடந்து கொண்டான் என்றும், அதனால் தேனாம்பேட்டையில் உள்ள பெரிய மனிதர் எல்லோரும் அவனை வேலையில் இருந்து விலக்கிவிட்டார்கள் என்றும், துரைராஜா அன்று காலையில் கேள்வியுற்றிருந்தான் ஆகையால், அந்த மாலையில் அவன் தேனாம்பேட்டையில் யாருடைய பங்களாவுக்குப் போகப் போகிறான் என்ற சந்தேகமும் துரைராஜாவின் மனதில் எழுந்து வதைத்துக் கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட மன நிலைமையோடு முன்னும் பின்னுமாக இருவரும் தேனாம்பேட்டைக்குள் போய்க் கொண்டிருக்க, அப்போது சுமார் ஏழரை மணி சமயமாயிற்று. மின்சார விளக்குக் கம்பங்கள் இருந்த இடங்களில் இருளடர்ந்திருந்தது. ஜனங்கள் மாத்திரம் போக்குவரத்தாகவே இருந்தனர். அந்தச் சமயத்தில் கிருஷ்ணாபுரம் சமஸ்தானத்து பங்களாவின் பின்புறம் வந்து சேர்ந்ததும், மதன கோபாலன் அவ்விடத்தில் நின்றான். அவன் நின்றதைக் கண்டு துரைராஜா தனக்கருகில் இருந்த ஒரு மரத்தின் மறைவில் சடக்கென்று மறைந்து தனது சிரத்தை மாத்திரம் நீட்டி மதனகோபாலன் என்ன செய்கிறான் என்பதைக் கவனித்தான். மதனகோபாலன் அப்புறம் இப்புறம் திரும்பிப் பார்த்து ஜனங்கள் எவரும் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, வேலியின் ஒரமாகச் சென்று, கண்மணியம்மாளால் குறிக்கப்பட்ட படல் எங்கே இருக்கிறதென்பதை ஆராயத் தொடங்கி, இரண்டு நிமிஷத்தில், அந்தப் படல் இருந்த இடத்தை எளிதில் கண்டு கொண்டான். எப்படியெனில், அன்று மாலையில் கண்மணியம் மாள் தனக்குத் தலைவலியாக இருக்கிறதென்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குள் உலாவ வந்தவள், அந்தப் படலின் கட்டை அவிழ்த்து, அதைச் சிறிதளவு திறந்து வைத்துவிட்டுப் போயிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/101&oldid=645826" இலிருந்து மீள்விக்கப்பட்டது