பக்கம்:மதன கல்யாணி-2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 மதன கல்யாணி

மதனகோபாலன் அங்கே வந்திருப்பானோ மாட்டானோ என்று அவள் சந்தேகமுற்றவளாய், அங்கே வந்தவள் ஆதலால், அவன் காலந்தவறாமல் வந்திருந்ததைக் காண, அவளது மனம் சந்தோஷத்தினால் பொங்கியது; தேகம் பூரித்தது. என்றாலும், தான் தனிமையில் அங்கே வந்ததை மீனாகூஜியம்மாளாகிலும், பிறராகிலும் கண்டு கொள்வார்களோ என்ற பெருத்த பீதியானது அவளது மேனியை அடிக்கடி நடுக்குவித்தது. அவளது சொற்களும் திக்கிப் போயின. அவளைப் போலவே மதன கோபாலனும் இன்பத்தினாலும் பீதியினாலும் தவித்து வாய் திறந்து பேசமாட்டாமல் தயங்கி நின்றான். அவ்வாறு இரண்டு நிமிஷ நேரம் மெளனத்தில் கழிய, கண்மணியம்மாள்தான் சீக்கிரத்தில் தனது மாடத்திற்குப் போய்விட வேண்டும் என்கிற கவலையினால் தூண்டப்பட்டவளாய், கோகிலத்வனி போன்ற தனது குரலை மெதுவாக எடுத்து அவனிடத்தில் ரகசியமாகப் பேச ஆரம்பித்து, உங்கள் விஷயத்தில் நான் நிரம்பவும் அபராதியாகி விட்டேன்; மன்னிக்க வேண்டும். இந்த இருளில், இப்படி வரும்படி, நான் உங்களை அழைத்தது பெருத்த குற்றம். இந்தக் காரியத்துக்கு நீங்கள் இணங்கி இங்கே வரவே மாட்டீர்கள் என்று நான் நினைத்தேன். நீங்கள் வந்திருப்பதைக் காண, இதிலிருந்து உங்களுக்கு என்னிடத்தில் எவ்வளவு ஆழ்ந்த அபிமானம் இருக்கிறதென்பது நன்றாகத் தெரிகிறது. என் விஷயத்தில் இவ்வளவு அன்பை வைத்திருக்கும் உங்களுக்கு நான் இந்த இழிவை உண்டாக்கி வைத்தது என் மனசையே அறுக்கிறது. அந்த விஷயத்தில் நான் செய்த பெரும் பிழையை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்’ என்று சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்தலைப் போல மிக அழகாகவும் பணிவாகவும் பேசி, மரியாதையாக அடங்கி வொடுங்கி நெடுந்துரத்திற்கப்பால் நின்றாள்.

அவளது குணத்தழகையும் சொல்லழகையும் கண்டு பூரித்துப் புளகாங்கிதமடைந்த மதனகோபாலன், “குழந்தாய்! ஆபத்துக்குப் பாவமில்லை என்று நீ தான் உன்னுடைய கடிதத்திலேயே எழுதி இருக்கிறாயே; அப்படி இருக்க, இதைப்பற்றி நீ மேன்மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/104&oldid=645831" இலிருந்து மீள்விக்கப்பட்டது