பக்கம்:மதன கல்யாணி-2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 101

எனக்கு உபசார வார்த்தை சொல்ல வேண்டுமா? ஏதோ பெருத்த சங்கடமான நிலைமையில் நீ இருப்பது பற்றியே என்னை இப்படி வருவித்தாய் என்பது தெரியவில்லையா? நீ என்னை இப்படி அழைத்ததைப் பற்றி நான் கொஞ்சமும் வித்தியாசமாக நினைக்கவுமில்லை; இப்படிப்பட்ட தகாத காரியத்தில் இறங்கு கிறோமே என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் உனக்கு எவ்விதமான துன்பம் நேர்ந்ததோ என்ற ஒரே கவலையும், அது என்னால் விலக்கக்கூடியதோ விலக்கக்கூடாததோ என்ற சஞ்சலத்தையும் அந்த நேரம் முதல் இன்னமும் கொண்டவனாக இருக்கிறேன்; நீ அதிக நேரம் இந்த இடத்தில் என்னோடு நிற்பது சரியல்ல. ஆகையால் நீ விஷயத்தை உடனே சொல்லலாம்” என்று அன்பொழுக நிரம்பவும் உருக்கமாக மொழிந்தான்.

அதைக் கேட்ட கண்மணியம்மாள், “ஆம், நீங்கள் சொல்வது போல நான் சீக்கிரமாகத் திரும்பிப் போக வேண்டியவள்தான்; அதே கவலையினால், என் வாய் குழறிப் போகிறதாகையால் விஷயத்தை எப்படிச் சொல்லுகிறது என்று மலைப்பாக இருக்கிறது. என்னை மாரமங்கலத்தார் விட்டில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறதாக நான் முன்னமேயே உங்களிடத்தில் சொல்லி இருக்கிறேன். அல்லவா! சில நாள்களுக்கு முன் இவர்களுடைய எண்ணம் எப்படி இருந்த தென்றால் மைனருடைய தகப்பனார் மரணந்த சாசனத்தில் இந்தக் கலியாணத்தை மைனருக்கு வயசு வந்த பிறகு செய்ய வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு இறந்து போனாராம்; அதன் பிரகாரம் இந்தக் கலியாணம் அடுத்த வருஷத்தில் நடக்க வேண்டியதாக இருந்தது. கல்யாணியம்மாள் அவர்களும் அதன்படியே தான் நடத்த வேண்டும் என்று இதுவரையில் சொல்லி வந்தார்கள்; ஆனால் அவர்கள் சில நாட்களுக்கு முன் இங்கே வந்து அத்தை யம்மாளிடம் பேசிக் கொண்டிருந்தபோது மைனர் துன்மார்க்கத்தில் இறங்கி அழிந்து போய்விடுவார் என்று தாம் அஞ்சுவதால், இந்தக் கலியானத்தை இப்போதே முடித்துவிட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்கு அத்தையம்மாளும் இணங்க, அப்போதே இருவரும் போய் ஊரில் உள்ள ஜனங்களை எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/105&oldid=645833" இலிருந்து மீள்விக்கப்பட்டது