பக்கம்:மதன கல்யாணி-2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 103

எனக்கு எவருமில்லை; என்னுடைய மனசு ஒரு முக்கியமான விஷயத்தினால் புண்பட்டு தீராத வேதனையை அடைந்து கொண்டிருக்கிறது; அது எதனால் என்றால், நான் என்னுடைய உயிருக்குயிராக மதித்து அபரிமிதமான மதிப்பு வைத்திருந்த என்னுடைய உபாத்தியாயர் ஒரிடத்தில் தகாத காரியத்தைச் செய்ய எத்தனித்ததாக நான் கேள்விப்பட்டேன். அது முதல் நான் சரியான படி உண்ணவுமில்லை; உறங்கவுமில்லை. அந்த அவதூறு உண்மையாக இருக்குமா என்ற நினைவும் விசனமுமே என் மனசை ஓயாமல் அறுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த மனக் குறையோடு நான் உயிரை விட்டால் என்னுடைய மனசு ஒரு நாளும் வேகாது; ஏமுேழு தலைமுறைக்கும் என் மனம் தவித்துக் கொண்டே இருக்கும். ஆகையால் இந்த விஷயத்தில் உண்மை யாக என்ன நடந்ததென்பதைக் கேட்டறிந்து என் மனசைத் திருப்தி செய்து கொண்டு உயிரை விட்டுவிட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதைக் கருதியே இன்று நான் உங்களை இப்போது இந்த இடத்துக்கு வரச்சொன்னது; ஏனென்றால் இன்றைய முகூர்த்தம் ஒத்தி வைக்கப்படாதிருந்தால் நான் இன்னம் ஒரு மணிக்குள் உயிரைவிட வேண்டியவனல்லவா; அதனாலே தான் ஆபத்துக்குப் பாவமில்லை என்று நான் உங்களுக்கு எழுதினேன். ஆனால், இன்று காலையில், கல்யாணியம்மாள் அவர்களிடத்திலிருந்து கடிதம் வந்தவுடனே, நான் மறுபடியும் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்; இன்றைக்கு வரவேண்டாம் என்றும், நாம் பேச வேண்டுவதை பிறகு பேசிக் கொள்ளலாம் என்றும், இன்னம் வேறு சில சங்கதிகளைக் குறித்தும் நான் அந்தக் கடிதத்தில் எழுதினேன். ஆனால் அதைக் கொடுத்தனுப்ப, சரியான வேலைக்காரி அகப்படவில்லை. என்னிடத்தில் அந்தரங்கமாக நடந்து கொள்ளும் வேலைக்காரி, இன்றைய தினம் வேலைக்கு வராமல் இருந்து விட்டாள்; அந்தக் கடிதம் கூட இதோ இருக்கிறது; பாருங்கள்!” என்று கூறிய வண்ணம் தனது மடியிலிருந்த ஒரு கடிதத்தைக் எடுத்து நீட்ட, மதனகோபாலன் கரைகடந்த விசனத்தில் ஆழ்ந்தவனாய், அந்தக் கடிதத்தைத் தனது கையில் வாங்கிக் கொண்ட வண்ணம், “குழந்தாய்! எனக்கு அவமானம் ஏற்பட்டதைப் பற்றி நான் படும் விசனத்தைவிட, நீ உயிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/107&oldid=645836" இலிருந்து மீள்விக்கப்பட்டது