பக்கம்:மதன கல்யாணி-2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 - மதன கல்யாணி

கிக்கும் படியான நிலைமையில் அவர்கள் இருந்தது என்னுடைய தவறினாலேயே அன்றி வேறல்ல. அவர்கள் கற்புநிலை தவறாத உத்தம ஜாதி ஸ்திரீ என்பதைப் பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. பிறர் தமது கற்பைப்பற்றி சந்தேகங்கூடக் கொள்ளக் கூடாது என்று, அவ்வளவு அதிக ஜாக்கிரதையாக நடந்து கொள்வது மேலான குணமல்லவா? நான் அன்றைய தினம் உன்னிடத்தில் பேசிய பிறகு, நான் அவர்களைப் பற்றி அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கொள்ளாதிருந்தேன், அதன் பிறகு நடந்த சங்கதிகளிலிருந்து நான் அந்த அபிப்பிராயத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டேன். அவர்கள் என்னைப் பற்றிச் சொன்ன அவதூறினால், என்னை எல்லோரும் வேலையில் இருந்து விலக்கிவிட்டதன்றி, நான் அயோக்கியன் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவைகளைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. நான் வேறே எந்த ஊருக்கா வது போனால், இதைவிட அதிகமாகச் சம்பாதித்து விடுவேன். இந்த அவதூறும் மறைந்து போகும். ஆனால், ஒர் உத்தம ஜாதி ஸ்திரீயின் கற்பைப்பற்றிப் பிறர் நிந்தனை சொல்லாமல், காப்பாற்றும் பொருட்டு, நான் இந்த சொற்ப நஷ்டத்தையும் ஏளனத்தையும் ஏற்றுக்கொள்வது ஒர் அபாரமான காரியமாகுமா? இதைப்பற்றி நான் நிரம்பவும் சந்தோஷமடைவதன்றி, இதனால், எனக்குப் பெருத்த புண்ணியமும் பலிதமானதாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆகையால், இந்தச் சம்பவத்தில் அவர்களின் மேல் கொஞ்சமும் தவறில்லை; ஆனால் நான் அவர்களை பெற்ற தாயைப் போலவே நினைத்திருப்பவன் ஆகையால், நான் சொப்பனத்தில்கூட அவர்களைப் பற்றி வித்தியாசமான எண்ணம் நினைத்திருக்க வில்லை ஆனாலும், நான் அவர்களிடத்தில் அவநம்பிக்கை கொண்டு ஓடியது மாத்திரம் என்மேல் பெருத்த குற்றந்தான். ஆனதுபற்றி, எனக்கு உடனே கைமேல் தண்டனை

பலித்துவிட்டது என்று சிறிதும் கபடமில்லாமல், மனப்பூர்வமான இரக்கத்தோடும் அனுதாபத்தோடும் கூற, கண்மணியம்மாள் அவனால் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் வேத

வாக்கியமாக அப்படியே ஏற்றுக் கொண்டதன்றி, அவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/112&oldid=645847" இலிருந்து மீள்விக்கப்பட்டது