பக்கம்:மதன கல்யாணி-2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i 13

செய்ய வேண்டும். நான் விதவை; உலக அனுபவம் இல்லாத ஸ்திரீ ஜென்மம். இந்த மூன்று குழந்தைகளையும் நல்ல வழியில் நடத்தும் பொறுப்பையும் இவ்வளவு பெரிய சமஸ்தானத்தை வைத்தாளும் அபாரமான சுமையையும் என் தலையின் மேல் வைத்துவிட்டு என்னுடைய பிராணபதி அவர்கள் போய்விட்டார் கள். நான் இவைகளினால் படும் துன்பமும் துயரமும் ஈசுவரனுக்கே தெரிய வேண்டும். நான் உங்களை என்னுடைய சொந்த சகோதரரைப் போல மதித்திருக்கிறேன்; தலை இல்லாத இந்தப் பரிதாபகரமான குடும்பத்தைக் காப்பாற்றி நிலைநிறுத்துவது உங்களைச் சேர்ந்த கடமை. இந்தப் பையன் விஷயத்தில் நீங்கள் என்ன ஏற்பாடு செய்கிறீர்கள் என்பதை எழுதி வேறோர் ஆள் மூலமாக அனுப்பும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். -

இப்படிக்கு, நன்றிமறவாத கல்யாணியம்மாள்.

-என்று அந்த அம்மாள் சிவஞான முதலியாருக்கு ஒரு கடிதம் எழுதி, அதை ஒர் உரைக்குள் போட்டு, அதன் வாயை ஒட்டிய பின், மேல்விலாசம் எழுதி, அதற்கு இரண்டு மூன்றிடங்களில் அரக்கு முத்திரை வைத்து, அந்தக் கடிதத்தைத் தனது கையில் வைத்துக் கொண்டவளாய் எழுந்து, சிறிது நேரம் உலாவியபின், தனது கட்டிலில் ஏறி உட்கார்ந்து சால்வையால் தன்னைப் போர்த்திக் கொண்டபின், வேலைக்காரியை அழைக்க, வாசற் படியில் எப்போதும் ஆயத்தமாக நின்று கொண்டிருந்த தாதி உள்ளே நுழைந்தாள். அவளைக் கண்ட கல்யாணியம்மாள், “அடி! நம்முடைய ஆபீஸ் மண்டபத்துக்குப் போய் குமாஸ்தா மோகன ரங்கனை அழைத்துவா” என்றாள். தாதி அதன்படி செய்ய வெளியில் போய்விட்டாள். ஆபீஸ் மண்டபம் என்பது அந்த பங்களாவின் கட்டிடங்களுக்கு நடுவில் ஒரு பக்கத்தில் இருந்தது; அங்கே, நாலைந்து குமாஸ்தாக்கள் எப்போதும் இருந்து குடும்ப வரவு செலவு கணக்குகளை எழுதுதல், கடிதப் போக்குவரத்து நடத்துதல், மாரமங்கலத்தில் இருந்த சமஸ்தானத்தின் முக்கிய மானேஜரிடத்திலிருந்து கல்யாணியம்மாளுக்கு வரும் அறிக்கை களுக்கு அந்தச் சீமாட்டியாரது உத்தரவுகளைப் பெற்றனுப்புதல் முதலிய காரியங்களைப் பார்த்து வந்தனர். அவர்களுள் மோகன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/117&oldid=645852" இலிருந்து மீள்விக்கப்பட்டது