பக்கம்:மதன கல்யாணி-2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i j4 மதன கல்யாணி

ரங்கனும் ஒருவன்; அவர்கள் எல்லோருக்கும் சாப்பாடு படுக்கை முதலிய யாவும் அந்த பங்களாவிலேயே நடைபெற்றன. அவர்களும் மற்ற எல்லாச் சிப்பந்திகளும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் போல போஷிக்கப்பட்டு வந்தனர். கல்யாணி யம்மாளால் அனுப்பப்பட்ட தாதி கச்சேரி மண்டபத்துக்குப் போய்ப் பார்க்க, மோகனரங்கன் காணப்படவில்லை. தாதி மற்ற குமாஸ்தாக்களை நோக்கி, மோகனரங்கனை எஜமானியம்மாள் அழைப்பதாகச் சொல்ல, அவர்கள், அவன் ஒரு நாழிகையாக கச்சேரியில் இல்லை என்றும், அவனது மேல்வஸ்திரம் அவனது நாற்காலியில் கிடந்ததென்றும் மறுமொழி கூற, அந்தத் தாதி உடனே திரும்பி வந்து அந்த விவரத்தைக் கல்யாணியம்மாளிடத் தில் தெரிவித்தாள். அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “; போய் கச்சேரி மண்டபத் தண்டையில் இருந்து, அவன் வந்த வுடனே இங்கே அழைத்துக் கொண்டுவா! எங்கேயாவது தாகத்துக்குச் சாப்பிடப் போயிருப்பான். சீக்கிரம் வந்துவிடுவான்” என்று சந்தேகத்திற்கு இடமின்றிக் கூறி அவளை அனுப்பிவிட்டு, தனது கட்டிலை விட்டுக் கீழே இறங்கி உலாவத் தொடங்கினாள். அவ்வாறு அரை நாழிகை நேரமாயிற்று; அப்போதும் மோகன ரங்கன் வராதிருந்தது அவளுக்கு வியப்பாகவும் சம்சயத்திற்கு இடமாகவும் இருந்தது. அவள் தனது மனதில் ஏதோக யோசனை செய்து கொண்டு, மெல்ல நடந்து, கட்டிலிற்குப் பக்கத்திலிருந்த பின் வாசலைத் திறந்து கொண்டு, புஸ்தகங்கள் இருந்த மகாலுக்குள் மெல்ல நுழைந்தாள். அங்கே கோமளவல்லியம்மாள் மாத்திரம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, ஏதோ ஒரு புஸ்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டு தனியாக இருந்தாள். தனது பெண்கள் இருவரும் எப்போதும் இணை பிரியாமல் இருக்கும் வழக்கம் உடையவர்கள் ஆகையால், கோமளவல்லியம்மாள் மாத்திரம் தனியாக இருந்தது கல்யாணியம்மாளுக்குப் பெருத்த சந்தேகத்தை உண்டு பண்ணியது. அவள் அதைப்பற்றி ஏதோ கவலைப்பட்டுக் கேட்பவளைப் போல, கோமளவல்லியை நோக்கி, “கண்ணு! நீ மாத்திரம் தனியாக இருக்கிறாயே, அக்காள் எங்கே காணோம்?” என்று அந்தரங்கமான வாத்சல்யத்தோடு கேட்க, தனது அம்மாளைக் கண்டு பயபக்தி மரியாதையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/118&oldid=645853" இலிருந்து மீள்விக்கப்பட்டது