பக்கம்:மதன கல்யாணி-2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் #15

எழுந்து நின்ற அந்த நற்குணவதி, “அக்காளுக்கு அதிக வெயிலினால் நிரம்பவும் கடுமையான தலைநோவாக இருக்கிற தாம். ஜன்னல்களை எல்லாம் மூடிக்கொண்டு, எவ்வித ஒசையும் காதில் படாமல், தன்னுடைய படுக்கை அறையில் படுத்துக் கொண்டிருக்கப் போவதாகச் சொல்லிவிட்டுப் போனாள் அவள் போய் ஒரு நாழிகை நேரம் இருக்கலாம்” என்றாள்.

அந்த வார்த்தைகள் கல்யாணியம்மாளது மனதில் சுருக்கென்று தைத்தது. “சரி காரியம் விபரீதத்துக்கு வந்துவிட்டது. அவளுக்கும் மோகனரங்கனுக்கும் சமீபகாலத்திலேயே நட்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும், இன்னமும் அவளுடைய தேக பரிசுத்தத் துக்கு ஹானி நேர்ந்திருக்காதென்றும், அப்படிப்பட்ட விபரீதம் நடப்பதற்குள் அவனைப் பிரித்துவிட வேண்டும் என்றும், நான் நினைத்தது தவறாகப் போய்விட்டது! இப்போது அவர்கள் இருவரும் அவளுடைய படுக்கையறையிலே தான் இருக்க வேண்டும்” என்று கல்யாணியம்மாள் தனக்குத் தானே நினைத்துக் கொண்டாள். அவளது மனமும் தேகமும் கட்டிலடங்காமல் பதறின. என்றாலும், அவைகளை எல்லாம் கோமளவல்லிக் கெதிரில் காட்டிக்கொள்ளாமல், அடக்கிக் கொண்டவளாய், “அடடா இந்தச் சங்கதியை அப்போதே என்னிடத்தில் சொல்லி இருக்கக்கூடாதா? இதற்கு என்னிடத்தில் நல்ல மருந்து இருக்கிறதே; இந்நேரம் தலைநோவெல்லாம் பறந்து போயிருக் குமே; கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு இப்படியும் நெய்க்கழுவார்களா? சரி, நீ இங்கேயே படுத்துக் கொண்டிரு நான் போய் அக்காளைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சந்தேகப் படாவிதமாக அவளிடம் பேசிவிட்டு, கல்யாணியம்மாள் சந்தடி யில்லாமல் நடந்து போய், துரைஸானியம்மாளது அந்தப்புரத்தை அடைந்தாள். அதன் வாசற்கதவும், ஜன்னல்களின் கதவுகளும் மூடி உட்புறத்தில் தாளிடப்பட்டிருந்தன.

கல்யாணியம்மாள் வாசற்கதவில் தனது கையை வைத்து உள்ளே தள்ளிப் பார்க்க, அது திறக்கக் கூடாமல் இருந்தது. ஆனால், உள்ளே இருந்த துரைஸானியம்மாள், “யார் அங்கே?” என்று கேட்டாள். உடனே கல்யாணியம்மாள், “நான் தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/119&oldid=645854" இலிருந்து மீள்விக்கப்பட்டது