பக்கம்:மதன கல்யாணி-2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மதன கல்யாணி

கூறுவதென்பதைக் குறித்து சிந்தனையில் ஆழ்ந்தாள். ஆனால் அந்தச் சீமாட்டி மற்ற எல்லோரைக் காட்டிலும், தனது மூத்த புத்திரியான துரைஸானியம்மாளிடத்திலேயே அதிக அச்சம் கொண்டிருந்தாளாதலால், தான் அவளிடம் பொய் பேசுவதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்ற கவலையும் தோன்றியது. மதனகோபாலனது விஷயத்தில் துரைஸாசியம்மாள் தனது உண்மையை அறிந்துகொண்டாள் என்ற பெருத்த பயம் அவளது மனதில் தோன்றி வதைத்துக்கொண்டே இருந்தது.

அவ்வாறு ஐந்து நிமிஷநேரம் கழிந்தது. அப்போது ஒரு வேலைக்காரன் வாசற்படிக்கு அப்பால் நின்ற வண்ணம், ‘அம்மணி அம்மணி!’ என்று பயபக்தியோடு கூப்பிட, கல்யாணியம்மாள் திடுக்கிட்டு நிமிர்ந்து, “யாராடா அது? வா இப்படி” என்று அதிகாரமாக அழைக்க, அந்த பங்களாவின் வாசற் காவற்காரன் உள்ளே நுழைந்து அடங்கி ஒடுங்கி, அவளுக்கெதிரிற் சிறிது தூரத்தில் வந்து நின்று, ஒரு கும்பிட்டு போட்டு நிற்க, அவனைக் கண்டு ஒருவாறு சஞ்சலமடைந்த கல்யாணியம்மாள், “என்னடா சங்கதி? எங்கே வந்தாய்” என்று அதிகாரமாகக் கேட்க, அந்த வேலைக்காரன் “ஒண்ணுமில்லிங்க: வாசல்லெ ஒரு ஐயா வந்திருக்கிறாரு இவரு இருக்கிறது. மைசூராம். நம்ப கிட்டுனாபுரம் செமீந்தாரையா மைசூரு லெ சந்தனக்கட்டை யாபாரம் பண்ணறாவளல்ல அவுங்களோடெ கூட்டாளியாம் இவுரு. எசமானெப் பார்க்கணுமாம்; கேட்டுக்கினு வரச்சொன்னாரு. ரொம்ப பெரிய மனிசருகணக்கா இருக்கறாரு” என்றான்.

அதைக்கேட்ட கல்யாணியம்மாள் ஒருவகையான வியப்பும் திகைப்பும் அடைந்து தனது நெற்றியை அழுத்திக்கொண்டு இரண்டொரு நிமிஷநேரம் சிந்தனை செய்தாள். கிருஷ்ணாபுரம் என்பது மாரமங்கலத்துப் பக்கத்தில் உள்ள இன்னொரு பெருத்த சமஸ்தானம்; அதன் ஜெமீன்தார் சுமார் ஐம்பது வயதடைந்தவர். அவரது மனைவி மக்கள் முதலியார் இறந்துவிடவே, அவர் அந்த விரக்தியாலும் வேறு பல ரகசியமான காரணங்களலும் அவர் அந்த ஊரைவிட்டுப் பதினைந்து வருஷ காலமாக மைசூரிலிருந்து பெருத்த முதல் வைத்து சந்தனக்கட்டை வர்த்தகம் செய்துவந்தார். அவர் தமது சமஸ்தானத்தில் குடிகளிடத்தில் இருந்து தமக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/12&oldid=645856" இலிருந்து மீள்விக்கப்பட்டது