பக்கம்:மதன கல்யாணி-2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மதன கல்யாணி

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் இடியோசையைக் கேட்ட நாகம் போல நடுநடுங்கி ஸ்தம்பித்து பேச்சுமூச்சுற்று இரண்டொரு நிமிஷம் அப்படியே அசைவற்று நின்றவளாய், “என்ன சொன்னாய் மதனகோபாலன் என்னிடத்தில் அயோக்கியத் தனமாக நடந்து கொண்டானோ? நான் அவனிடத்தில் தவறுதலாக நடந்து கொண்டேனோ? ஏதேது வர வர உன்னுடைய புத்தி விபரீதமாக ஆகிவிட்டதே அறியாத குழந்தை என்று உன்னை நினைக்கிறதா அல்லது எதற்கும் துணிந்த அயோக்கிய சிகாமணி என்று நினைக்கிறதா என்பது தெரியவில்லையே” என்றாள்.

அதைக் கேட்ட துரைஸானியம்மாள், “எப்படி வேண்டுமா னாலும் நினைத்துக் கொள்ளலாம்; நீங்களும் பசவண்ண செட்டி யாரும் பேசிக் கொண்டிருந்ததையும் நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். அதிலிருந்து, நீங்கள் தான் மதனகோபால னைப் பிடித்திழுத்தீர்கள் என்று எங்களுடைய மனசு நம்பி விட்டது. அதன் மேல் இந்தக் காரியத்தைச் செய்துவிட்டேன். அதை இனி மறைப்பதில் உபயோகம் என்ன? அண்ணனுக்கு நீங்கள் ஒரு தேவடியாளை அமர்த்திக் கொடுத்து, அவளுக்குப் பத்திரமும் எழுதி ஒழுங்குபடுத்தி வைத்தீர்களே; அதைப் போல எனக்கும் இந்தக் காரியத்தை ஒழுங்குபடுத்தி வைத்துவிடுங்கள். எனக்கு வேறே கலியாணம் வேண்டாம்” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் திக்பிரமை கொண்டு, அது கனவோ நினைவோ என்று சந்தேகித்து, தனது வயிற்றில் பிறந்த பெண் அப்படியும் துணிந்து பேசுவாளா என்ற வியப்பை அடைந்ததன்றி, அவளும், கோமளவல்லியும் ஒளிந்திருந்து தனது அந்தப்புரத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்களே என்ற ஆத்திரமும் அடைந்தாள். மிகுந்த நற்குணமும் பயபக்தியும் நிறைந்தவளான கோமளவல்லியையும் அவள் கெடுத்துவிட்டாளோ என்ற கவலையும் வருத்தத் தொடங்கியது. அவள் மகா இறுமாப்பாகவும் குறும்பாகவும் போக்கிரித்தனமாகவும் பேசுவதைக் காணவே, கல்யாணியம் மாளுக்கு அவளோடு மேன்மேலும் வாக்குவாதம் செய்வது பிடிக்கவில்லை. அன்பாகவும் நியாயமாகவும் பேசி அவளது மனதை மாற்ற வேண்டும் என்று தான் எண்ணியதும் பலிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/124&oldid=645862" இலிருந்து மீள்விக்கப்பட்டது