பக்கம்:மதன கல்யாணி-2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 9

சேரவேண்டிய வரிகளை வசூலித்துத் தமது காரியங்களை எல்லாம் நிருவகிப்பதற்கு கிருஷ்ணாபுரத்தில் ஒர் ஏஜண்டை வைத்திருந்தார். அவரது தம்பியின் குழந்தைகளே கண்மணியம்மாள் துரைராஜா என்ற இருவர்களும்; மீனாகூஜியம்மாள் அந்தக் கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தாரது தங்கையானாலும் அவர்களிருவருக்கும் பலவகையான காரணங்களால் உள்ளுக்குள் மனஸ்தாபம் இருந்து வந்தமையால், அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து பதினைந்து வருஷ காலத்திற்குமேல் ஆயிற்று. ஆனால் அவர் துரைராஜா, கண்மணியம்மாள் முதலியவர்களது போஷணைக்காக மாதாமாதம் பெருத்த பணத்தொகைகளை அனுப்பும்படி தமது ஏஜண்டுக்கு உத்தரவு செய்திருந்ததன்றி, அப்போதைக்கப்போது, அவர்களுக்குக் கடிதமும் எழுதிவந்தனர். அவரது அபாரமான சமஸ்தானத்திற்கும் சொத்துக்களுக்கும் துரைராஜாவே வார்கதார் ஆவான் என்று யாவரும் நினைத்து வந்தனர். அவருக்கும் மீனாகூஜியம்மாளுக்கும் மனதிற்குள்ளாக மனஸ்தாபம் இருந்து வந்ததானாலும் அவர்கள் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் கடிதப் போக்குவரத்து மாத்திரம் வைத்துக் கொண்டிருந்தனர். இந்த வரலாற்றை எல்லாம் கல்யாணியம்மாள் நன்றாக அறிந்தவளானாலும், அவளுக்கும் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருக்கும் எவ்விதப் பழக்கமும் உண்டானதில்லை. கல்யாணியம்மாள் மாரமங்கலம் ஜெமீந்தாரிணியானதற்கு முன்னால் தனது இளம்பிராயத்தில், அவரை ஒருமுறை மாரமங்கலத்தில் பார்த்திருந்ததன்றி, அதன் பிறகு அவர் எப்படி இருப்பார் என்பதையே அவள் கண்டறிந்தவள் அன்று.

ஆதலால், இப்போது அவரது கூட்டாளியான ஒருவர்தன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்பதைக் கேட்கவே, அவர் தன்னிடத்தில் எதற்காக வந்திருக்கிறார் என்பது விளங்காமையால் அவள் சிறிது நேரம் தடுமாறிய பின், அந்த வேலைக்காரனை நோக்கி, ‘கிருஷ் ணாபுரம் ஜெமீன்தார் இவரை என்னிடம் அனுப்பினார் என்று இவரே சொன்னாரா?” என்றாள். வேலைக்காரன், “ஆமாங்க. என்னமோ ரொம்ப அவசரமான சங்கதியாம். தலெ போற

காரியமாம். எசமாங்கிட்ட ஒடனே பேசணுமாம்” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/13&oldid=645869" இலிருந்து மீள்விக்கப்பட்டது