பக்கம்:மதன கல்யாணி-2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 மதன கல்யாணி

திகைப்பும் அடைந்தார். அந்த உலகத்தில் வேறு எவ்விதப் புகலுமற்று சுத்த அநாதையாக இருந்த அவனை, தாம் அவ்வளவு துரம் வளர்த்து, உத்தியோகத்தில் அமர்த்தியதைக் கருதி, அவன் அதற்கு முன் அவரைக் காணும் போதெல்லாம், பெருத்த தெய்வத்தைக் காண்பதைப் போன்ற பயபக்தி விசுவாசத்தோடு அடங்கி யொடுங்கி நிற்பவனாதலால், அன்று காணப்பட்ட மாறுதல், ஏதோ புதிய சம்பவத்தைக் குறித்தது. அவர் மிகுந்த கபடகுணம் உள்ளவர் ஆதலால், தமது வியப்பையும், சந்கேத்தை யும் வெளிப்படுத்தாமல் அடக்கிக் கொண்டு, அவனால் மேஜையின் மேல் வைக்கப்பட்ட கடிதத்தை எடுத்து, மிகவும் நிதானமாக அதன் மேல்விலாசத்தைப் படித்துப் பார்த்து, அதன் உறையின் ஒரு பக்கத்தைக் கிழித்து, உள்ளே இருந்த கடிதத்தை வெளியில் இழுத்துப் பிரித்து, அதன் எழுத்துகள் அவனது கண்களில் படாமல் அதை ஒர் அட்டையின் மேல் வைத்துக் கொண்டு மனதிற்குள்ளாகவே படிக்கத் தொடங்கினார். அந்தக் கடிதத்தின் முதல் பாகத்தைப் படித்த போது அவரது முகத்தில் எவ்விதமான மாறுபாடும் தோன்றவில்லை; அதன் பிற்பகுதியைப் படிக்க ஆரம்பித்த போது, அவரது முகம் சடக்கென்று மாறியது. ஆனால் அவர் அடுத்த நொடியில் தமது இயற்கை நிலைமையை அடைந்து எவ்விதமான சலனமும் தோன்றாத முகத்தோடு கடிதத்தைப் படித்து முடித்தார். முடிக்கவே, ஆரம்பத்தில் அவரது மனதில் தோன்றிய ஐயம் உடனே நீங்கிவிட்டது; பையன் துரைஸ்ானியம்மாளிடத்தில் கள்ள நட்புக் கொண்டிருப்பத னாலோ, அல்லது, அதை எதிர்பார்த்தோ, அந்த மகிழ்ச்சியை அடக்கமாட்டாமல், அவ்வாறு புது மனிதனாகக் காணப்படுகிறான் என்பதை அவர் உடனே யூகித்துக் கொண்டார். கடிதத்தை இன்னொரு முறை அடியிலிருந்து படிப்பவரைப் போல நடித்தவராய், முதலியார் அவனது விஷயத்தில் தாம் எவ்விதமான ஏற்பாடு செய்யலாம் என்பதைப்பற்றி தமது மனதில் சிந்தித்து, இரண்டொரு நிமிஷ நேரம் பேசாமல் இருந்தபின் நிமிர்ந்து ஒன்றையும் அறியாத பைத்தியக்காரரைப் போல நடித்து அவனை அன்போடு பார்த்து, “மோகனரங்கம் எஜமானியம்மாள் உன்னை சீக்கிரமாகத் திரும்பி பங்களாவுக்கு அனுப்பிவிடும்படி இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/132&oldid=645873" இலிருந்து மீள்விக்கப்பட்டது