பக்கம்:மதன கல்யாணி-2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 133

யோடு ஆயத்தமாக நின்று கொண்டிருந்தான். சிவஞான முதலியார் வண்டியின் கதவைத் திறந்து, அதற்குள் ஏறி உட்கார்ந்து கொண்டு மோகனரங்கனை நோக்கி, “வா உள்ளே உட்கார்ந்து கொள்” என்றார். அவருக்கெதிரில் அவன் தனது முகக் குறிகளை எல்லாம் அடக்கிக் கொண்டவனாய், மறுமொழி கூறாமல் பெட்டி வண்டிக்குள் ஏறி முதலியாருக்கெதிர்ப் பக்கத்தி லிருந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டான். உடனே வண்டியின் கதவு மூடித் தாளிடப்பட்டது. “எழும்பூர் ரயில் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோ” என்று ஆக்ஞாபித்தார் சிவஞான முதலியார். வண்டி உடனே புறப்பட்டு, விசையாகச் சென்று ஒரு நாழிகை நேரத்தில் எழும்பூர் ரயிலடியண்டை வந்து நின்றது. முதலியாரும் மோகனரங்கனும் கீழே இறங்கி டிக்கெட்டு வாங்கும் இடத்திற்குப் போனார்கள். உடனே சிவஞான முதலியார் பணங் கொடுத்து செங்கல்பட்டு ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கெட்டு வாங்கினார். அப்போது பிற்பகல் 512-மணியாகி யிருந்தது. 5-50-க்கு அங்கே இருந்த ஒரு வண்டி போவது வழக்கம் ஆதலால், அந்த வண்டி அப்போது உட்புறத்தில் ஆயத்தமாக நின்று கொண்டிருந்தது. அந்த வண்டி தவறாமல் அதிலேயே அவனை அனுப்பிவிட வேண்டும் என்று உறுதி செய்து கொண்டிருந்தார் ஆதலால், சிவஞான முதலியார் தமது பெட்டி வண்டியிலேயே அவனையும் வைத்துக் கொண்டு, தாமும் அவனோடு கூடவே வந்து டிக்கெட்டையும் தாமே வாங்கினதன்றி, அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று ரயில் வண்டியில் அவனை ஏறி உட்காரச் செய்தார். உடனே அவர் தமது கையில் இருந்த டிக்கெட்டையும், சட்டைப் பைக்குள்ளிருந்த கடிதத்தையும், அவனது சொந்தச் செலவுக்காக ஒரு ரூபாய் பணத்தையும் எடுத்து அவனிடத்தில் கொடுத்து, அந்தக் கடிதத்தைத் தமது தம்பியிடத்தில் கொடுக்கும்படியாகவும், அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும்படியாகவும், அவனது க்ஷேமத்தைப் பற்றி அடிக்கடி கடிதம் எழுதும்படிக்கும் அவனிடத்தில் அன்போடு கூற, அவன் அப்படியே செய்வதாகத் தனது தலையின் அசைப்பினால் சைகை செய்தானேயன்றி, வாயைத் திறந்து ஒரு வார்த்தையாகிலும் பேசவில்லை. அவன் தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/137&oldid=645880" இலிருந்து மீள்விக்கப்பட்டது