பக்கம்:மதன கல்யாணி-2.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 மதன கல்யாணி

மனதிற்குள்ளாகவே மிகுந்த துன்பமுறுகிறான் என்பதை அவர் அறிந்தும், அதை உணராதவர் போல, அவனை எப்போதும் நடத்துகிற வழக்கம் போலவே ஒரு வகையான அன்போடும் அதிகாரத்தோடும் அவனிடத்தில் மொழிந்து நின்றார். அதற்குள் வண்டி புறப்பட்டு நகர்ந்து விசையாக ஓடத் தொடங்கிவிட்டது. வண்டி நெடுந்துரம் செல்லும் வரையில் சிவஞான முதலியார் அந்தப் பக்கத்திலேயே திரும்பி நின்று மோகனரங்கனையே பார்த்துக் கொண்டிருந்து வண்டி மறைந்தவுடனே அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுத் தமது பெட்டி வண்டிக்குப் போய்ச் சேர்ந்தார்.


20-வது அதிகாரம் காணக் கிடைக்காத கட்டழகி

Lதினேழாவது அதிகாரத்தின் முடிவில் மதனகோபாலன் துரை ராஜாவினால் சுடப்பட்டுக் கீழே வீழ்ந்தான் என்றும், உடனே போலிஸ் ஜெவான்கள் வந்து சூழ்ந்து கொண்டார்கள் என்றும் சொன்னோம் அல்லவா! அவர்கள் அவ்வாறு நெருங்கியவுடனே, தங்களது சட்டைப்பைக்குள் மறைத்து வைத்திருந்த லாந்தர்களை வெளியில் எடுத்துக் கைகளில் பிடித்துக் கொண்டு அங்கே வீழ்ந்த மதனகோபாலனை உற்று நோக்கினர். அவன் மூர்ச்சித்து அசை வற்றுப் பிணம் போலக் கிடந்தான். ரிவால்வரிலிருந்து வெளிப் பட்ட குண்டு அவனது வலது காலின் ஆடுசதையைச் சிறிதளவு செதுக்கிக் கொண்டு போயிருந்ததாகையால், அந்த இடத்திலிருந்து வெளிப்பட்ட இரத்தம் தரையில் நெடுந்துரம் வரையில் குளமாகத் தேங்கியிருந்ததன்றி காயத்திலிருந்து அப்போதும் உதிரம் பெருகிக் கொண்டிருந்தது. அவன் முரட்டுத் தோற்றமுள்ள திருடனைப் போலக் காணப்படாமல், யாரோ பெரிய மனிதரது வீட்டுப் பிள்ளை போல, நல்ல முகக்களையும் யெளவனமும் அழகும் வாய்ந்த மன்மத புருஷனாக இருந்ததைக் கண்ட போலீஸ் ஜெவான்கள், தாங்கள் அவனைத் திருடன் என்று எண்ணியது பெருத்த தவறென்பதை உடனே கண்டு கொண்டவர்களாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/138&oldid=645881" இலிருந்து மீள்விக்கப்பட்டது