பக்கம்:மதன கல்யாணி-2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 137

யில் உட்காரும் ஸ்தானத்திலிருந்த மெத்தையின் மேல் சாத்தி வைத்தனர். அவன் ஸ்மரணை இல்லாதிருப்பதால் நழுவிக் கீழே வீழ்ந்து விடுவான் ஆதலால், இருவர் வண்டியின் மேலே இருந்து, அவனைப் பிடித்துக் கொள்ளும்படி அந்த வண்டியின் எஜமானர் கூற, அவ்வாறே, இருவர் உட்கார்ந்து பிடித்துக் கொள்ள, வண்டி போலீஸ் ஸ்டேஷனை நோக்கி மெதுவாகச் செல்ல ஆரம்பித்தது; துரைராஜாவும் வண்டியின் பின்புறத்திலிருந்த பலகையில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அதன் பின்னால், இரண்டு ஜெவான் களும், வண்டியின் சொந்தக்காரரும் நடந்து சென்றனர். அந்தப் போலிஸ் ஸ்டேஷன் மிக்க அருகிலிருந்தமையால், வண்டி அதிசீக் கிரத்தில் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தது. மதனகோபாலனும் எடுத்துக் கொண்டு போய் உட்புறத்தில் விடப்பட்டான். அங்கே இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரும் மிகுதியிருந்த ஜெவான் களும் வியப்போடும் ஆவலோடும் மதனகோபாலனுக்கருகில் வந்து அவனை உற்று நோக்கி, மிகுந்த சஞ்சலமுமடைந்தனர். திருடன் தோட்டத்திற்குள் நுழைந்திருப்பதாகக் கூறி, உடனே ஜெவான்களை அனுப்ப வேண்டும் என்று துரைராஜா வந்து கேட்டுக் கொண்டது, சப் இன்ஸ்பெக்டர் முதலியோருக்குத் தெரிந்த விஷயம் ஆதலால், அதில் சம்பந்தப்பட்ட மனிதனே அவ்வாறு காயமடைந்து வந்திருக்கிறான் என்பதை அவர்கள் யூகித்துக் கொண்டனர். ஆனாலும், அதன் வரலாற்றை அறியப் பெரிதும் ஆவல் கொண்டனர். உடனே சப் இன்ஸ்பெக்டர் ஒரு ஜெவானை ஏவி தண்ணிரை எடுத்து மூர்ச்சித்துக் கிடப்பவனது முகத்தில் தடவி விசிறியால் வீசும்படி உத்தரவு கொடுக்க, அவன் அவ்வாறே செய்து மூர்ச்சையைத் தெளிவிக்கத் தேவையான முயற்சிகளைச் செய்தான்.

மதனகோபாலனது காலின் காயத்தில் கட்டப்பட்டிருந்த அங்க வஸ்திரம் முழுதும் இரத்தத்தினால் நனைந்து போனதன்றி, அதிலிருந்து இன்னமும் உதிரம் கசிந்து கொண்டிருந்ததைக் கண்ட சப் இன்ஸ்பெக்டர் உடனே வேறொரு ஜெவானை அழைத்து சமீபத்திலிருந்த ஒரு டாக்டரை அழைத்து வரும்படி கூறி, பைசைகிலில் போகும்படி அவனை அனுப்ப, அவன் அவ்வாறே விசையாகச் சென்றான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/141&oldid=645887" இலிருந்து மீள்விக்கப்பட்டது