பக்கம்:மதன கல்யாணி-2.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 மதன கல்யாணி

அதற்குள், வண்டிக்குப் பின்னால் நடந்து வந்த இரண்டு ஜெவான்களும், ஸாரட்டின் சொந்தக்காரரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவ்விடத்திலிருந்த சப் இன்ஸ்பெக்டர் முதலியோரான எல்லோரது பார்வையும், அந்த ஸாரட்டின் சொந்தக்காரரின் மீது சென்றது. துரைராஜா அவரை அதற்கு முன் நன்றாகப் பார்க்க வில்லை ஆதலால், அப்போது அவனும் அவரை உற்று நோக்க அவனது முகம் சடக்கென்று மாறுதலடைந்தது. அன்று சாயுங் காலம் கோமளேசுவரன் பேட்டையில் மதனகோபாலனது வீட்டின் வாசலில் லாரட்டில் வந்திறங்கி உள்ளே போன மனிதரே அங்கேயும் வந்திருந்ததைக் காண, அவன் ஒருவாறு நடுநடுங்கிக் குழப்பமடைந்தான். தான் மதனகோபாலனைப் பின்பற்றி வந்த போது கோமளேசுவரன் பேட்டையில் அவனது வீட்டிற்குள் இருந்த மனிதர், அதற்குள் எங்கேயோ போய்விட்டு, தனது பங்களாவண்டையில் எப்படி வந்திருக்கக் கூடும் என்ற வியப்பும் ஐயமும் தோன்றின. மதனகோபாலன் இந்த இடத்திற்கு வந்திருக் கிறான் என்பதை ஒருகால் அவரும் உணர்ந்தவராக இருப்பாரோ என்றும், அவர் ஒருகால், அவனை மாத்திரமாவது, அல்லது, அவனோடு தனது தங்கையையும் சேர்த்தாவது ஸாரட்டில் வைத்து அழைத்துக் கொண்டு போக அங்கே வந்தவராக இருக்குமோ என்றும் பலவாறு எண்ணமிட்டு மெளனமாக நின்று கொண்டிருந்தான். அப்போது சப் இன்ஸ்பெக்டர் ஜெவான்களுள் ஒருவனை நோக்கி, அதன் வரலாறென்ன என்று கேட்க, அவன் சப் இன்ஸ்பெக்டரை நோக்கி, “யாரோ ஒரு திருடன் தங்களுடைய தோட்டத்துக்குள் நுழைந்து போவதாக இவர் சொன்னதின்மேல் நாங்கள் போனோமல்லவா? நாங்கள் அங்கே போன போது, ஒரு படல் திறந்து வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் எங்களுடைய லாந்தர்களை சட்டைப்பைக்குள் வைத்து மறைத்துக் கொண்டு சந்தடி செய்யாமல் மெல்ல உள்ளே போனோம். தோட்டத்தின் நடுவில் ஒர் ஆலமரம் இருக்கிறது. நாங்கள் கொஞ்சதுரத்திலிருந்து, அங்கே பார்த்த போது யாரோ இரண்டு மனிதர்கள் நிற்பதைப் போல இருந்தது. அவர்கள் தணிந்த குரலில் பேசிக் கொண்டது போலவும் தோன்றியது. நாங்கள் பதுங்கிப் பதுங்கி அந்த ஆலமரத் துக்கு சமீபத்தில் போய் நெருங்க, அதற்குள் அவர்களுள் ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/142&oldid=645888" இலிருந்து மீள்விக்கப்பட்டது