பக்கம்:மதன கல்யாணி-2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மதன கல்யாணி

சட்டைப் பைக்குள் சொருகிக் கொண்டு, தமது விலாசத்தையும் கொடுத்துவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு அவ்விடத்தைவிட்டு வெளிப்பட்டு, குதிரை வண்டியில் தமது கம்பவுண்டரோடு ஏறிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தார்.

பசவண்ண செட்டியாரது உடம்பிலிருந்த விலையுயர்ந்த ஆடைகளையும், விரல்களிலிருந்த வைர மோதிரங்களையும், தங்கச் சங்கிலியுள்ள கடிகாரம், தங்க முக்குக் கண்ணாடி முதலிய பெரிய மனித சின்னங்களையும், அவரது சட்டைப்பைக்குள் இருந்த திரவியக் குவியலையும் கண்ட சப் இன்ஸ்பெக்டர் முதலிய போலீசாரும் துரைராஜாவும் மிகவும் பிரமித்து, அவர் யாரோ பெருத்த பிரபுவென்று நினைத்து, அவரிடத்தில் மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் வைக்கத் தொடங்கினர், அப்படிப்பட்டவரது நட்பு தனக்கு ஏற்பட்டால் அதனால் தனக்குப் பெருத்த அனுகூலங்கள் ஏற்படும் என்று துரைராஜா எண்ணிக் கொண்டதன்றி, அப்போது அவரோடு கூடவே கோமளேசுவரன் பேட்டை சுந்தர விலாசத்திற்குப் போய், அங்கே மறைவாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்திரீ ரத்தினத்தைக் கண்ணாலா கிலும் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

அப்போது பசவண்ண செட்டியார் மதனகோபாலனை அவனது ஜாகைக்கு எடுத்துக் கொண்டு போவதற்கு சப் இன்ஸ் பெக்டரிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டார். துரைராஜா, தானும் உதவிக்காக அவரோடுகூட கோமளேசுவரன் பேட்டை வரையில் வந்து விட்டுத் திரும்பி வருவதாகக் கூற, பசவண்ண செட்டியார் அதற்கு இணங்கினார். உடனே, சப் இன்ஸ்பெக்டரது உத்தரவின் மேல், சில ஜெவான்கள் மதனகோபாலனை மெதுவாகத் தூக்கிக் கொணர்ந்து ஸாரட்டில் பக்குவமாகச் சார்த்தி வைக்க, உடனே பசவண்ண செட்டியார், அவர்களது பிரயாசைக் காக பெருத்த பணத்தொகையைச் சன்மானம் செய்துவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டு துரைராஜாவையும் ஏறி உட்காரச் செய்து, வண்டியை ஆடாமல் மெல்ல ஒட்டும்படி ஆக்ஞாபித்தார். ஸாரட்டு வண்டி மெதுவாகச் செல்லத் தொடங்கியது; டாக்டரால் கொடுக்கப்பட்ட மருந்து, மதனகோபாலன் தனது காயத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/148&oldid=645897" இலிருந்து மீள்விக்கப்பட்டது