பக்கம்:மதன கல்யாணி-2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 149

துரைராஜா, “அது தான் சரி; மதனகோபாலன் போலீஸ் ஸ்டேஷனில் கண்ணைத் திறந்த பிறகு இன்னமும் கண்ணைத் திறந்தே பார்க்கவில்லை. இப்போது நீங்கள் நாற்காலியிலிருந்து படுக்கையில் விடும் போது ஒருவேளை அவன் கண்ணைத் திறந் தாலும் திறக்கலாம். அவனிடத்தில் என்னை மன்னித்துக் கொள்ளும்படியாக ஒரே ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டு, நான் போகிறேன்” என்றான். 3

அதைக்கேட்ட செட்டியார், இப்போது கொடுக்கப்பட்டிருப்பது போதை மருந்து; அவன் கண்ணைத் திறப்பான் என்பதே சந்தேகம்; இருந்தாலும் பாதகமில்லை. உள்ளே வாருங்கள்’ என்று கூறி முன்னால் நடக்க, துரைராஜா பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்றான். வண்டிக்காரன் மாத்திரம் வெளியில் நின்றான். மற்ற எல்லோரும் உள்ளே சென்றவுடன் வாசற் கதவு சாத்தி உட்புறத்தில் தாளிடப்பட்டது. செட்டியாரும் துரை ராஜாவும் பின்னால் சிறிது நின்று உள்ளே நுழைந்தார்கள் ஆதலால், முன்னாகவே நாற்காலியைத் தாங்கிச் சென்ற வேலைக் காரர்கள் அந்தக் கூடத்தின் ஒரு பக்கத்தில் கிடந்த கட்டிலின் மேல், மெத்தையைப் பிரித்துவிட்டு, மதனகோபாலனை மெதுவாகத் துக்கி அதன்மேல் படுக்கவைத்தனர். அப்போதும் அவன் கண்ணைத் திறக்காமலே துவண்டு சவம் போலக் கிடந்ததைக் கண்ட செட்டியார், சரி; உங்களுடைய எண்ணம் பலிக்க போகிற தில்லை’ என்றார். அதைக் கேட்ட துரைராஜா அதற்கு மேல் பேச்சை வளர்க்க மாட்டாதவனாய், சரி; நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். நாளைக்கு ஒரு மணிக்கு வரவேண்டியதை மறந்துவிட வேண்டாம்’ என்றான். இல்லை இல்லை; அதை மறப்பேனோ!’ என்று கூறிய வண்ணம் செட்டியார் திரும்பவும் வாசலை நோக்கி நடக்க, துரைராஜா அவருக்குப் பின்னால் தொடர்ந்து வந்தான்; அதற்குள் அந்த வீட்டிற்குள்ளிருந்த ஆண் பெண்பாலார் யாவரும் மதனகோபாலனுக்கு ஏதோ பெருத்த விபத்து நேர்ந்துவிட்டதென்று யூகித்துக் கொண்டு தங்களது விசனத்தை அடக்க மாட்டாமல், கோவென வாய்விட்டு அத் தொடங்கினர். அப்போது மேன்மாடிப் படியில், ஐயோ! தெய்வமே இப்படியும் சதி செய்தாயா!’ என்று ஒரு கூக்குரல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/153&oldid=645905" இலிருந்து மீள்விக்கப்பட்டது