பக்கம்:மதன கல்யாணி-2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 153

கடிதம் கொண்டு வந்திருக்கிறான். அதை நேரிலே தங்களிடத்தில் கொடுக்கும்படி அனுப்பினார்களாம். குப்பன் வெளியில் நிற்கிறான்” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் சடக்கென்று எழுந்து உட்கார்ந்து, “சரி அவனை உள்ளே அனுப்பிவிட்டு, நீ வாசலில் இரு” என்றாள். வேலைக்காரி அவ்வாறே வெளியில் சென்று, குப்பன் என்னும் பையனை உள்ளே அனுப்ப, அவன் பயபக்தி யோடு உள்ளே வந்து துரத்தில் நின்றபடி மரியாதையாக ஒரு கடிதத்தை நீட்டினான்; அதை வாங்கிய கல்யாணியம்மாள் அவனை நோக்கி, “குப்பா இதை உன்னிடத்தில் வக்கீல் ஐயாவே நேரில் கொடுத்தார்களா?” என்றாள்.

குப்பன்:- ஆமாங்க.

கல்யாணி:- வேறே ஏதாவது சங்கதி சொன்னார்களா?

குப்பன்:- இல்லிங்க; கடுதாசியெ ஒங்க கிட்ட நேருலேயே குடுத்துப்புட்டு வந்துவிடச் சொன்னாங்க - என்றான்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகுந்த பதைபதைப்போடு கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

மாரமங்கலம் சமஸ்தானத்து மகாராணியம்மாளான ம-ா-ா-பூநீ மகாகனம் தங்கிய கல்யாணியம்மாள் அவர்கள் சமுகத்துக்கு, வக்கீல் சிவஞானம் மிகுந்த வணக்கமாக எழுதிக் கொள்ளும் விக்ஞாபனம். உபயக்ஷேமம். அவ்விடத்திலிருந்து அனுப்பப் பட்ட கடிதம் வரப்பெற்றேன். அரண்மனைக் குழந்தைகளின் கலியான சம்பந்தமாக எழுதப்பட்டுள்ள சங்கதிகளைத் தெரிந்து கொண்டேன். நாளைய தினம் காலையில் நான் அங்கே வந்து தங்களுக்கு ஆகவேண்டிய காரியங்களை எல்லாம் ஒழுங்குப் படுத்திவிட்டு மறுவேலை பார்க்கிறேன். மற்ற எல்லா விவரங் களைப் பற்றியும் நாம் அப்போது நேரில் பேசிக் கொள்ளலாம்.

நிற்க, இன்னொரு முக்கியமான விஷயத்தில் தங்களுடைய அனுமதி இல்லாமலேயே நான் ஒரு காரியம் செய்கிறேன். அதைப் பற்றி தாங்கள் ஆயாசப்பட மாட்டீர்கள் என்று நம்பியே அப்படிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/157&oldid=645911" இலிருந்து மீள்விக்கப்பட்டது