பக்கம்:மதன கல்யாணி-2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 155

விழ்வது போல, அத்தனை துன்பங்களினிடையில், மோகனரங் கனை சிவஞான முதலியார் மிகவும் தந்திரமாக செங்கல்பட்டிற்கு அனுப்பிவிட்டார் என்ற செய்தியானது கல்யாணியம்மாளுக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கியது. ஏனெனில், துரைஸானி யம்மாளை இனி சுயேச்சையாக விடுத்தாலும், அவள் வீட்டை விட்டு ஒடிப் போவதற்கு சந்தர்ப்பம் ஏற்படாதென்ற நினை வினால் கல்யாணியம்மாளுக்கு ஒருவித மனோதைரியம் ஏற்பட்டது; ஆகவே, அந்த அம்மாள் ஒருவகையான ஊக்கங் கொண்டவளாய், ஒரு நாழிகை நேரம் ஏதோ விஷயத்தைக் குறித்துச் சிந்தனை செய்த வண்ணம் படுத்திருந்த பின்னர் எழுந்து, கட்டிலை விட்டுக் கீழே இறங்கி, மேஜைக்கருகில் இருந்த நாற்காலியின் மேல் உட்கார்ந்து, பக்கத்திலிருந்த காகிதத்தை எடுத்து நேராக வைத்துக் கொண்டு; அடியில் வருமாறு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினாள்:

கடிதம்

மகா-ா-ா-ஸ்ரீ மகாகனம் தங்கிய ராமலிங்கபுரம் சமஸ்தானாதிபதி

திவ்விய சமுகத்துக்கு, மாரமங்கலம் கல்யாணியம்மாள் வணக்கமாக

எழுதிக் கொள்ளும் விக்ஞாபனம். உபயக்ஷேமம்.

தாங்கள் பல கடிதங்கள் மூலமாகவும் மனுஷ்யாள் மூலமாகவும் பிரஸ்தாபித்த விஷயத்தில், நாங்கள் நன்றாக யோசனை செய்து பார்த்தோம். ஜாதகங்களின் பொருத்தம் நிரம்பவும் திருப்திகரமாக இருக்கிறது. மற்ற எல்லா அம்சங்களும் எங்களுடைய மனசுக்குப் பிடித்தமாகவே இருக்கின்றன. எங்களுடைய குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று தாங்களும் தங்களுடைய தேவியாரும் நிரம்பவும் பிரியப்படுவதாகத் தாங்கள் பல சமயங்களில் எழுதியிருக்கிற விஷயத்தைக் கருதியும், நான் தங்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதைத் தவிர, வேறு எவ்விதமான தகாத மறுமொழியையும் எழுத என் மனம் இணங்க வில்லை. ஆகவே நான் என்னுடைய மூத்த குழந்தையைத் தங்களுடைய ஜேஷ்ட புத்திரருக்குப் பாணிக்கிரகணம் செய்து கொடுக்கும் விஷயத்தில் பரிபூரணமான சம்மதியுள்ளவளாக இருக்கிறேன்; கடவுளின் கிருபையால், நம்முடைய கோரிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/159&oldid=645913" இலிருந்து மீள்விக்கப்பட்டது