பக்கம்:மதன கல்யாணி-2.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மதன கல்யாணி

அவளது மனத்திலிருந்ததன்றி, தன்னைக் கண்டு பிறர் இழிவாகப் பேசும்படியான நிலைமையில் தன்னை வைத்த தனது தாய் மீது பெருத்த பகைமையும் கோபமும் மூண்டு கொதித்துக் கொன் டிருந்தன. ஆகவே, அந்த மடந்தை அந்த வேலைக்காரியின் முகத்தில் தான் எப்படி விழிக்கிறது என்று கிலேசமடைந்தவளாய் முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டிருந்தாள்.

உள்ளே வந்த வேலைக்காரியோ சிறிதும் கபடமறியாதவள்; எந்த விஷயத்திலும் உள்ளொன்றும் புறமொன்றும் இல்லாமல், உள்ளதை உள்ளபடியே பேசக்கூடிய திறப்பான மனதையுடை யவள். கல்யாணியம்மாள் சொல்லும் வார்த்தைகளை எல்லாம் அவள் எப்போதும் வேத வாக்கியம் என்று நம்புகிறவள் ஆதலால், அவள் துரைஸானிக்குத் தலைநோவென்று சொன்ன கட்டுக் கதையை உண்மை என்று நம்பி வந்தவளாதலால், அவள் தலை நோவினால் வருந்தும்போது தான் மின்சார விளக்கைக் கொளுத்தி வைத்ததைப் பற்றி, அவள் தன்மேல் கோபங் கொள்வாளோ என்று பெரிதும் அஞ்சி திகில் கொண்டவளாய் அடிமேலடி வைத்து மெல்ல நடந்து கட்டிலண்டை வந்து நின்று, “அம்மா என்று மெதுவாகக் கூப்பிட்டாள். அதைக் கேட்ட துரைஸ்ானி, “என்னடி சின்னி எங்கே வந்தாய்’ என்றாள்.

சின்னம்மாள் மிகவும் வணக்கமாக, “உங்களுடைய தலைநோவு எப்படி இருக்கிறதென்று எஜமான் பார்க்கச் சொன்னார்கள். உங்களுக்கு என்ன ஆகாரம் வேண்டுமோ அதைக் கொண்டு வந்து இங்கேயே கொடுக்கச் சொன்னார்கள். இன்று ராத்திரி முழுதும் வெளியில் வராமல் நீங்கள் இங்கேயே படுத்திருந்தால், குணமுண்டாகுமாம். யாரும் உளடளே வந்து தொந்தரவு செய்யாதிருப்பதற்காக, கதவை வெளியில் பூட்டி வைத்தார்களாம். இப்போது சாப்பாடு போட்டு உங்களைப் படுக்க வைத்துவிட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு வரச் சொன்னார்கள். இப்போது தலைநோவு எப்படி இருக்கிறது?” என்றாள்.

உடனே துரைஸானியம்மாள் உண்மையை யூகித்துக் கொண்டாள்; தன்னைப் பற்றிப் பிறர் இழிவாக நினைக்காமல்

விருக்கும் பொருட்டு, தனது தாய், தலைவலியாய் இருக்கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/164&oldid=645924" இலிருந்து மீள்விக்கப்பட்டது