பக்கம்:மதன கல்யாணி-2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 161

எவரும் உள்ளே வரக்கூடாதென்று, பூட்டுப் போட்டிருப்பதாகப் போக்குக் காட்டியிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டாள். இருந்தாலும், பல நாட்கள் வரையில் அந்தப் பொய் முகாந்தரத் தைத் தனது தாய் சொல்லிக் கொண்டிருக்க முடியாதாகையால், அவள் தன்னை எப்படியும் மறுநாள் காலையில் வெளியில் விட்டுவிடுவாள் என்பதை உறுதியாக எண்ணிக் கொண்டாள் ஆதலால், தனது தாய் சொன்ன கட்டுக்கதைக்கிணங்க, தானும் வெளியில் வராமல் அன்றிரவு முழுதும் அவ்விடத்திலேயே இருந்து விட்டால், சிப்பந்திகள் எவ்வித சந்தேகமும் கொள்ள இடமில்லாமல் போகும் என்று தீர்மானித்துக் கொண்டாள். ஆனால் தனது தாய் தன்னை அறைக்குள் வைத்துப் பூட்டி விட்டுப் போனபிறகு, அவள் தனது கோபத்தால் மோகன ரங்கனுக்கு எவ்விதமான தீங்கிழைப்பாளோ என்ற ஒரே கவலை கொண்டவளாய், தான் எப்படியும் அவனோடு ஒடிப்போக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு படுத்திருந்தாள் ஆதலால், தனது தாயின் அந்தப்புரத்தில் நடந்த விவரங்களை எல்லாம் அறிந்து கொள்ள விருப்பம் கொண்டவளாய் அவளை நோக்கி, “சின்னி எஜமானியம்மாளுடைய அந்தப்புரத்தில் இன்றைக்கு இருக்க வேண்டிய முறை யாருடையது? என்றாள்.

சின்னம்மாள்:- என்னுடைய முறைதான்.

துரைஸானி:- அப்படியானால், இன்று வைக்கப்பட்டிருந்த நிச்சயதாம்பூல முகூர்த்தத்தை ஒத்தி வைத்திருப்பதாக எஜமானி யம்மாள் இன்று காலையில் கடிதம் எழுதி மீனாகூஜியம்மாளுக்கு அனுப்பினார்களே; அதை யாரிடத்தில் கொடுத்தனுப்பினார்கள்? சின்னம்மாள்:- சின்ன குமாஸ்தா மோகனரங்கனிடத்தில் கொடுத்தனுப்பினார்கள்.

துரைஸானி:- அது காலையில் நடந்ததல்லவா, பிற்பகலில், எஜமானியம்மாள், மறுபடியும் அவனை அழைத்தார்கள் போலிருக்கிறதே! அவனை மறுபடியும் எங்கே அனுப்பினார்கள் என்பது உனக்குத் தெரியுமா?

சின்னம்மாள். பிற்பகல் மூன்று மணி இருக்கும், எஜமானி

யம்மாள் மைலாப்பூர் வக்கீல் ஐயாவுக்கு ஒரு கடிதம் எழுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/165&oldid=645926" இலிருந்து மீள்விக்கப்பட்டது