பக்கம்:மதன கல்யாணி-2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மதன கல்யாணி

வைத்துக் கொண்டு, குமாஸ்தா மோகனரங்கனை அழைத்துக் கொண்டு வரும்படி என்னைக் கச்சேரி மண்டபத்துக்கு அனுப்பினார்கள். நான் போய்ப் பார்த்தேன். அவன் அங்கே இல்லை. நான் உடனே வந்து அந்தச் சங்கதியைத் தெரிவித்தேன். கச்சேரியண்டையிலிருந்து அவன் வந்தவுடனே அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்கள். நான் போயிருந்தேன். அவர் சுமார் 42 மணிக்கு வந்தான்; நான் உடனே அவனை அழைத்துக் கொண்டு போய் அம்மாளிடத்தில் விட்டேன். அவர்கள் ஒரு கடிதத்தை அவனிடத்தில் கொடுத்து வக்கீலையாவிடத்தில் கொடுத்துவிட்டு, அவர் பதில் கொடுத்தால், வாங்கிக் கொண்டு வரச் சொன்னார்கள். அவன் உடனே போய்விட்டான்.

துரைஸானி:- அவன் திரும்பி வந்துவிட்டானா?

சின்னம்மாள்:- அவன் வரவில்லை. வக்கீல் ஐயா அவனை ஏதோ அலுவலின் மேல் நிறுத்திக் கொண்டார்கள் போலிருக்கிறது; வேறொரு ஆளிடத்தில் பதில் கொடுத்து அனுப்பினார்கள்.

துரைஸானி:- அப்படியானால் அவன் இன்னமும் திரும்பியே வரவில்லையா?

சின்னம்மாள்:- இன்னமும் அவன் வரவில்லை. நான் இப்போதுகூட கச்சேரி மண்டபத்துக்குப் போயிருந்தேன். பெரிய குமாஸ்தா மாத்திரமே இருந்தார்.

துரைஸானி:- அப்படியா! நீ இப்போது கச்சேரிக்கு என்ன காரியமாகப் போனாய்?

சின்னம்மாள்:- எல்லாம் உங்களுடைய காரியந்தான். துரைஸானி:- (திடுக்கிட்டு) அதென்னடீ என்னுடைய காரியம்.

சின்னம்மாள்:- எஜமானியம்மாள் ராமலிங்கபுரம் சமஸ்தானத்து மூத்த பிள்ளைக்கு உங்களைச் கட்டிக்கொடுக்க சம்மதிக்கிறதாகவும், உடனே மனுஷ்யாளை அனுப்பி முகூர்த்தப் பத்திரிகை வாங்கிக் கொண்டு போகும்படிக்கும் எழுதி அனுப்பிவிட்டார்கள். அந்தக் கடிதத்துக்கு மஞ்சள்குறி வைத்துக்கொண்டு, தபால் தலை ஒன்று கச்சேரியிலிருந்து வாங்கிக் கொண்டு வரச் சொன்னார்கள். தபால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/166&oldid=645927" இலிருந்து மீள்விக்கப்பட்டது