பக்கம்:மதன கல்யாணி-2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 173

தனது உயிர்நிலையை விட்டு, தன்னை அந்தக் கொடிய ரயில் வண்டி பிரித்து மேன்மேலும் அப்பால் கொண்டு போகிறதே என்ற நினைவு அப்போதே அவனது மனதில் உறைத்தது. உடனே கீழே இறங்கி, தான் யோசிக்க வேண்டுவதை எல்லாம் அன்றிரவு முற்றிலும், அந்த ஸ்டேஷனில் இருந்து யோசித்து ஒருவிதமான திர்மானம் செய்து கொண்டு அதன்படி நடக்கலாம் என்று நினைத்தவனாய், மோகனரங்கன் பல்லாவரம் என்னும் ஸ்டேஷனில் வண்டியிலிருந்து கீழே இறங்கிவிட்டான். இறங்கினவன், செங்கல்பட்டிற்கு வாங்கப்பட்டிருந்த தனது டிக்கெட்டை அதை வசூலிக்கும் சிப்பந்தி இடத்தில் கொடுத்து விட்டு, வெளியிற் போய் மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள் தங்கும் ஒரு மண்டபத்தில், வசதியான ஒரு மூலையை அடைந்து, அங்கவஸ்திரத்தால் தலை முதல் கால் வரையில் போர்த்திக் கொண்டு படுத்தான். -

அவ்வாறு படுத்தவன் அன்றிரவு முழுதும் துக்கமே கொள்ள மல் சிந்தனையில் ஆழ்ந்து கிடந்தான். மறுநாட் காலையில் அவன் அவ்விடத்தை விட்டு எழுந்த போது தான் சென்னைக்குப் போகாமல், சைதாப்பேட்டைக்குப் போய், அவ்விடத்திலிருந்து மூன்று மைலுக்கப்பால் சமுத்திரக் கரையில் உள்ள அடையாறு என்னும் ஊரில் உள்ள தனது அக்காள் வீட்டிற்குப் போய் தனது ரகசியங்களை எல்லாம் அவளிடத்தில் வெளியிட்டு அவளது உதவியைக் கொண்டு, ஒரு தனியான இடம் அமர்த்தி துரைஸானியம்மாளை எவ்வாறாகிலும் தான் கொணர்ந்துவிட வேண்டும் என்று உறுதி செய்து கொண்டவனாய், எழுந்து தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, பட்டணத்திற்கு வரும் அடுத்த ரயிலில் ஏறிவந்து சைதாப்பேட்டையில் இறங்கி, அவ்விடத்திற்கு மூன்று மயில் தூரத்திலிருந்த அடையாறு கிராமத்தை நோக்கி நடக்கலானான். அவன் ஒரு வருஷ காலத்திற்கு முன் அந்த ஊருக்குப் போய்த் தனது அக்காளைப் பார்த்தவனாதலால், அவள் அவ்விடத்திலேயே இருக்கிறாளோ, அல்லது அவ்விடத்தை விட்டு வேறிடத்திற்குப் போய்விட்டாளே என்ற சந்தேகம் உண்டாயிற்று; சிவஞான முதலியார் மோகன சங்கனையும் அவனது அக்காளையும் பள்ளிக்கூடத்தில் வாத்திச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/177&oldid=645949" இலிருந்து மீள்விக்கப்பட்டது