பக்கம்:மதன கல்யாணி-2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மதன கல்யாணி

நான் கேட்க இணங்குகிறேன். ஆனால் அந்தத் தறுதலைப் பையனை நான் ஒரு நாளும் மன்னிக்க முடியாது” என்று அழுத்தமாகக் கூறினாள். .

அதைக் கேட்ட பசவண்ண செட்டியார் ஒருவாறு ஆயாசம் அடைந்தவர் போலக் காட்டிக் கொண்டு, “என்ன அம்மணி மன்னிக்க முடியாதா? அவனா மன்னிப்புக் கேட்கிறது? தவறு செய்தவர்கள் அல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும். அவன் தனக்கு நியாயம் வேண்டும் என்று கேட்கிறான்; மன்னிப்புக் கேட்கவில்லை” என்றார்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் முன்னிலும் அதிக ஒய்யாரமாக நிமிர்ந்து, “நீர் பேசும் வார்த்தைகளைக் கவனித்தால், அந்த மனிதன், தான் செய்த காரியத்தை வேறே விதமாக மாற்றி உம்மிடத்தில் சொல்லி இருக்கிறான் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது” என்று, தான் சொல்வதே உண்மையான செய்தி என்ற உறுதி தோன்றி சிறிதும் சலனமில்லாத முகத்தோற்றத்தோடு மொழிந்தாள்.

பசவண்ண செட்டியார், “அவன் தன்னுடைய உயிரே போவதா னாலும், பொய் பேசக்கூடிய பையனே அல்ல என்பது உங்கள் மனசுக்கே நன்றாகத் தெரியும் ஆகையால், அதை நான் அதிகமாக ரு.ஜூப்பிக்க வேண்டிய அவசியமே இல்லை” என்று புன்சிரிப்பாக மொழிந்தார்.

கல்யாணியம்மாள் அதைக் கேட்டவுடனே மிகுந்த கோபங் கொண்டவள் போலத் தனது முகத்தை விகாரப்படுத்திக் கொண்டு, “என்ன சொன்னர்? அவன் பொய் சொல்லக் கூடியவனல்ல என்றால், நான் சொல்வது பொய் என்று பொருள்படும்படி அல்லவா நீர் பேசுகிறீர்! பேசுவதை யோசித்து ஜாக்கிரதையாகப் பேசும்; யாரிடத்தில் பேசுகிறோம் என்பது ஞாபகமிருக்கட்டும்” என்று அதிகாரமாக மொழிந்தாள். .

அதைக் கேட்ட பசவண்ண செட்டியார் அருவருப்பான புன்னகை செய்து, “அம்மணி தயவு செய்து கோபித்துக்கொள்ளக் கூடாது. ஒருவர் செய்த தவறை எடுத்து நேருக்கு நேர் சொல்வதே மிகவும் அசங்கியமான காரியம். அதிலும், வாதி ஆண்மகனாகவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/18&oldid=645954" இலிருந்து மீள்விக்கப்பட்டது