பக்கம்:மதன கல்யாணி-2.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் + 3

மோகனரங்கனை அழைத்துக் கொண்டு, நடையில் இருந்து மேலே சென்ற படிகளின் வழியாக ஏறி அடுத்த நிமிஷத்தில் மேன் மாடிக்குப் போய்ச் சேர்ந்தாள். அங்கே கூடத்தில் சில நாற்காலி களும் ஊஞ்சற் பலகையும் இருந்தன; அந்த ஊஞ்சற்பலகையின் மேல் உட்கார்ந்து ஏதோ ஒரு புஸ்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த ஒரு யெளவன மாது மோகனரங்கனைக் கண்டவுடனே இனிமையும் புன்னகையும் சொரிந்த முகத்தினளாய் மிகுந்த ஆவலும் ஆசையும் தோன்ற எழுந்து, “வா தம்பி வா என்று அன்பொழுக வரவேற்று, எதிர்கொண்டு போக, மிகுந்த செல்வமும் செழுமையும் அழகும் நிறைந்தவளாகத் தோன்றிய தனது அக்காளான ராஜாயி அம்மாளைக் கண்டவுடனே ஆனந்த பரவசம் அடைந்தவனாய், புன்னகையும், சந்தோஷமும் ஜ்வலித்த முகத்தோடு அவளிருந்த இடத்திற்கு நெருங்க, அப்போது ராஜாயியம்மாள் சற்று துரத்தில் கிடந்த ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு, அதன்மேல் உட்கார்ந்து கொண்டான். உடனே ராஜாயியம்மாள் வேலைக்காரியை நோக்கி, “அடி கண்ணியம்மா தம்பி முதலில் காப்பி சாப்பிடட்டும். காலலம்ப ஒரு செம்பில் தண்ணிர் கொண்டு வந்து வைத்துவிட்டு, பலகாரத்தை யும் காப்பியையும் இங்கேயே கொண்டுவந்து வை’ என்றாள். கன்னியம்மாள் அந்த உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு, அப்பாவிருந்த அறைகளுக்குள் போய்விட்டாள்; மோகனரங்கன் ஒரு வருஷ காலத்திற்கு முன்னர், தனது அக்காளைப் பார்த்தபோது அவள் அதிக சதைப் பிடிப்பும், அழகும் இல்லாமல் சாதாரண மனுஷியாக இருந்தாள் ஆதலால், இப்போது அவள் நல்ல உருட்சி திரட்சியும், உன்னத வனப்பும் பெற்று, ஒரு சக்கரவர்த்தினி போலவும் மிகுந்த சுகபோகங்களில் இருப்பவள் போலவும், உயர்ந்த பட்டாடைகள், வைர ஆபரணங்கள் முதலியவைகள் ஜ்வலிக்க நின்று கொண்டிருந்ததைக் கண்டு காட்சி மோகன ரங்கனுக்குக் கனவோ நினைவோ என்ற சந்தேகத்தை உண்டாக் கியது. தானும் தனது அக்காளும் மிகுந்த ஏழ்மை நிலைமையி லிருப்பவர்கள் என்றே அவன் அதுகாறும் நினைத்திருந்தவன் ஆதலால், மாரமங்கலத்து அரண்மனைப் பெண்களைக் காட்டிலும் அதிகப் பெருந்தன்மையும், செல்வச் செழுமையும் நிரம்ப நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/187&oldid=645968" இலிருந்து மீள்விக்கப்பட்டது