பக்கம்:மதன கல்யாணி-2.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 மதன கல்யாணி

தனது அக்காளைக் காணவே அவன் கரைகடந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தவனாய், இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து என்ன பேசுவதென்பதை அறியாதவனாக இரண்டொரு நிமிஷம் இருந்தான்; அப்போது தனது தம்பியைக் கண்டு நாணி மரியாதை யாக நிற்பவள் போல சற்று துரத்தில் நின்று கொண்டிருந்த ராஜாயி அம்மாள் என்ற அந்தக் கட்டழகி மோகனரங்கனை நோக்கி, “தி எங்களைத் தேடிக் கொண்டு அடையாற்றுக்குப் போனதாகவும், வழியில் நம்முடைய ராவுத்தர் தெய்வச் செயலாக உன்னைச் சந்தித்து அழைத்து வருவதாகவும் கொஞ்ச நேரத்துக்கு முன் வந்து சேர்ந்த கோஷா அம்மாளிடத்தில் கேள்விப்பட்ட முதல் உன்னைப் பார்க்கப் போகிறோம் என்கிற சந்தோஷத்தினால் ஆகா! நான் நிமிஷத்துக்கு நிமிஷம் ஜன்னலண்டையில் வந்து வாசலைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நீ வந்து சரியாக ஒரு வருஷ காலம் ஆகிறதல்லவா?” என்றாள்.

மோகனரங்கன்:- ஆம்; சரியாக ஒரு வருஷமாகிறது. நான் வந்து உங்களைப் பார்க்க வேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன் தெரியுமா? வக்கீல் ஐயாவிடத்தில் நான் உத்தரவு கேட்கும் போதெல்லாம், “ஆகட்டும் போகலாம்” “ஆகட்டும் போகலாம்” என்று சொல்லிக் கொண்டே வந்தார். இப்போதும் அவராக என்னை அனுப்பவில்லை. நானே வந்தேன் - என்றான்.

ராஜாயி:- நீ அடையாற்றுக்கு வந்துவிட்டுப் போன பிறகு, உனக்கு நான் ஐந்து கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அவைகளுக்கு நீ ஒரு கடிதம்கூட பதில் எழுதாமல் பேசாதிருந்ததைப் பார்க்கப் பார்க்க எனக்கு நிரம்பவும் கவலையாக இருந்தது.

மோகன:- (திகைப்பும் வியப்பும் அடைந்து) என்ன ஐந்து கடிதங்கள் எழுதினாயா? ஒன்றுகூட என்னிடத்தில் வந்து சேர வில்லையே! நீ எந்த மேல்விலாசத்துக்கு எழுதினாய்?

ராஜாயி:- வக்கீல் ஐயா மேல்விலாசம் பார்த்து உனக்குக் கொடுக்கும்படியாக எழுதினேன்.

மோகன:- சரி, சரி; அவர்கள் என்னிடத்தில் ஒரு கடிதங்கூடக் கொடுக்கவில்லை. நாம் ஒருவருக்கொருவர் க்ஷேம சமாசாரங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/188&oldid=645970" இலிருந்து மீள்விக்கப்பட்டது