பக்கம்:மதன கல்யாணி-2.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#92 w மதன கல்யாணி

மாரமங்கலம் ஜெமீந்தாரிணியம்மாள் அவர்களுக்கு,

மோகனரங்கன் செங்கல்பட்டுக்குப் போகவில்லை. அவன் துரைஸானியம்மாளை எப்படியும் உங்களுடைய பங்களாவி லிருந்து அழைத்துப் போய், நாளைய தினம் இரவு ஒன்பது மணிக்குள் அவளுக்குத் தாலிகட்டத் தீர்மானித்து விட்டான். நீங்கள் எவ்விதமான பக்கபலத்தோடு இருந்தாலும், அவனுடைய எண்ணம் நிறைவேறாமல் தடுக்க அந்த ஈசுவரனாலும் முடியாது; நீங்களும் கூட இருந்து சந்தோஷமாக இந்தக் கலியானத்தை முடித்து வைக்க விருப்பமா, அல்லது, உங்களுடைய தகவலின்றி இந்தக் காரியம் நடக்க விருப்பமா, என்பதை உடனே ஒரு கடிதத்தில் எழுதி, நாளை சாயுங்காலம் சரியாக ஆறு மணிக்கு உங்களுடைய பங்களாவில் வாசலில் உள்ள தபாற் பெட்டி யண்டையில் வந்து நிற்கும் மனிதரிடத்தில் கொடுத்தனுப்பினால், காரியம் அதன்படி நிறைவேறும். கடிதம் கொடுக்காவிட்டால், நீங்கள் கலியானத்திற்கு வர விரும்பவில்லை என்று நினைத்துக் கொள்ளுவான்.

இப்படிக்கு தங்கள் விதேயன், நrத்திரத் தரகன்.

-என்று எழுதப்பட்ட கடிதத்தைப் படித்து முடித்த மோகனரங்கன் திகைப்பும் வியப்பும் அடைந்து தனது அத்தானுக்கு ஒருகால் புத்தி ஸ்வாதீனத்தில் இல்லையோ என்று நினைத்தவனாய், திக்பிரமை கொண்டு மெளனமாக நிற்க, அவனது கையிலிருந்த கடிதத்தை வாங்கிய ராஜாயி அம்மாள், அதை உறைக்குள் போட்டு, அரையனாத் தபால் தலை ஒட்டி, கன்னியம்மாளை அழைத்து, அதை உடனே கொண்டு போய் தபால் பெட்டியில் போட்டுவிட்டு வரும்படி கொடுத்தனுப்ப, அவள், அதை வாங்கிக் கொண்டு வாசலுக்குப் போய்விட்டாள். தனது அத்தான் தன்னிடத்தில் பரிகாசம் செய்கிறார் என்று அதுகாறும் நினைத்த மோகனரங்கன், தனது அக்காளும் அதற்கு அனுசரணையாக நடந்து அதை உண்மையிலேயே தபால் பெட்டியில் போடச் சொன்னதைக் கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/196&oldid=645986" இலிருந்து மீள்விக்கப்பட்டது