பக்கம்:மதன கல்யாணி-2.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 193

23-வது அதிகாரம்

துன்ப மூட்டை

துரைராஜா மதனகோபாலனது வீட்டிலிருந்த மோகனாங்கியைக் கண்ட நிமிஷம் முதல் அன்றைய இரவு முழுதும் அவளைப் பற்றியே தியானம் செய்தவனாகத் தனது கண்ணிமைகளை முடாமல் இரவு முழுதும் மிகுந்த வாதனையில் ஆழ்ந்து கிடந்தான். அந்த அதியற்புத சுந்தர மடந்தையின் ஜெகஜ்ஜோதியான வடிவம் மின்னல் தோன்றி மறைவது போல, ஒரு நிமிஷ நேரம் அவனது சிருஷ்டியில் பட்டு மறைந்து போனது முதல், அந்த வடிவம் புகைப்படம் போல அவனது மனதில் பதிந்து போகவே, இளஞ் சூரியனைக் கண்ட கண்களுக்கு, கண்ட கண்ட இடத்திலெல்லாம் எண்ணிறந்த சூரிய வட்டங்களே நிறைந்து தோன்றுதல் போல, துரைராஜாவின் அகக்கண்ணில் மோகனாங்கியின் வசீகர ரூபமே நின்று, அவன் பார்த்த இடத்திலெல்லாம் நிறைந்து ஆனந்த நடனம் புரிந்தது. அவளது மையலில் ஆழ்ந்து மதிமயங்கி, அறிவிழந்து தன்னையும் உலகையும் மறந்து, ஏக்கமும் சோர்வும் அடைந்து, தத்தளித்துக் கிடந்த துரைராஜா, மறுநாட் பகலில் ஒரு மணிக்குத் தனது பங்களாவிற்கு வருவதாக வாக்களித்திருந்த பசவண்ண செட்டியாரிடத்தில் அவளது வரலாறுகளை எல்லாம் கேட்டறிந்து, எப்பாடு பட்டாயினும் தான் அவளது நட்பை அடைய வேண்டும் என்ற உறுதி செய்து கொண்டு, எப்போது பொழுது விடியும் என்றும், எப்போது பகல் வேளை வரும் என்றும் தியானம் செய்து விரக வேதனையால் உயிரழிந்து கிடந்தான். அன்றைய இரவுப் பொழுதும், அவனை வதைக்க வேண்டும் என்று நீளுவது போல, மிகவும் பெருகி வளர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றியது; கடைசியில் பொழுது விடிந்தது. அவனது உடம்பு எழுந்திருக்க மாட்டாமல் மிகுந்த தளர்வடைந்திருந்த தானாலும், அதற்கு மேல், சயனத்தில் இருப்பது நெருப்பின் மேல் கிடப்பது போல இருந்த மையால், துரைராஜா எழுந்து தனது காலைக்கடன் களை எல்லாம் முடித்துக் கொண்டு, திரும்பவும் தனது சயனக் கிரகத்தை அடைந்து, ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். பக்கத்திலிருந்த மேஜையின் மேலே கிடந்த நாவல் புஸ்தகங்களுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/197&oldid=645988" இலிருந்து மீள்விக்கப்பட்டது