பக்கம்:மதன கல்யாணி-2.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#94 மதன கல்யாணி

ஏதாகிலும் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு படித்தால், தனது நினைவு அந்த நாவலின் விஷயத்திற் செல்வதால், மோகனா, யின் நினைவும் வாதனைகளும் சிறிது நேரமாகிலும் மறை, திருக்குமோ என்ற எண்ணத்தினால் தூண்டப்பட்டவனாய், ஆ. யெளவனப் புருஷன், ஒரு நாவலை எடுக்க முயல, அது விஷம் போலத் தோன்றியதாகையால், அவனது கையே அதை எடுத் மாட்டாமல் பின் வாங்கியது.

அவன் அப்படிப்பட்ட பரிதாபகரமான நிலைமையிலிருக்க, காலையில் மணி ஏழரை ஆயிற்று. அப்போது ஒரு வேல்ைகாரன் அங்கே வந்து, “எஜமானே! மாரமங்கலம் மைனர் துரை ஒரு கடிதத்தையும் ஒரு மூட்டையையும் ஒரு வேலைக்காரியினிடத் தில் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அவள் இதோ வாசலில் வந்து நிற்கிறாள். அவைகளை எல்லாம், அவளே நேரில் கொண்டு வந்து உங்களிடத்தில் கொடுக்க வேண்டுமாம்” என்றான். அதைக் கேட்ட துரைராஜா, குடிவெறியிலிருந்து தெளிவிக்கப்பட்டவன் போலவும், தூக்கத்திலிருந்து விழிப்பிக்கப்படுபவன் போலவும், மோகனாங்கியின் ஜெபத்தைவிட்டு, அவன் தனது நினைவை மாற்றி சேவகன் சொன்ன விஷயத்தில் அதைச் செலுத்தினான். மாரமங்கலம் மைனர் தனக்கு எவ்விதமான மூட்டையை அனுப்பி இருக்கப் போகிறான் என்ற வியப்பும், ஆவலும், பலவகையான யூகங்களும் உண்டாயின. அந்த வேலைக்காரியை உள்ளே அழைத்து வரும்படி அவன் வேலைக்காரனிடத்தில் உடனே உத்தரவு செய்ய, அவன் உடனே வெளியில் போய் இரண்டொரு நிமிஷத்தில் அந்த வேலைக்காரியும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்து துரைராஜாவின் எதிரில் நின்றான். அவனோடு வந்த வேலைக்காரி மிகுந்த வணக்க வொடுக்கத்தோடு துரை ராஜாவினண்டையில் நெருங்கி, தனது கையில் வைத்துக் கொண்டிருந்த ஒரு கடிதத்தையும், ஒரு சிறிய மூட்டையையும் மேஜையின் மீது வைத்துவிட்டு, சற்றுதுரத்தில் ஒதுங்கி மரியாதை யாக நின்றாள்.

அதைக் கண்ட துரைராஜா அவளை நோக்கி, “இவைகளை யார் - கொடுத்தனுப்பியது” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/198&oldid=645990" இலிருந்து மீள்விக்கப்பட்டது