பக்கம்:மதன கல்யாணி-2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 மதன கல்யாணி

என்னுடைய ஆருயிர் நண்பனான துரைராஜாவுக்கு, மாரமங் கலம் மைனர் - துரை எழுதுவது. உபய கூேடிமம்.

என்னுடைய கண்மணியான பாலாம்பாள் போன்ற அரிய மாணிக்கத்தை நான் இதுவரையில் கண்டதே இல்லை; அழகிலும், குணத்திலும், புத்திசாலித் தனத்திலும், என் மனசுக் கியைந்தபடி நடந்து கொள்ளும் நாயக வாத்சல்யத்திலும், கனவிலும் பிறனை நினைக்காத பதிவிரதா குனத்திலும், அவளுக்கிணை வேறே பெண் இந்த ஈரேழு பதினான்கு லோகங்களிலும் இருக்க மாட்டாள் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை என்னை விட்டு ஒரு நொடி நேரம் பிரிந்திருக்க அவளும் சகிக்கமாட்டாள்; எனக்கும் அவளை விட்டுப் பிரிந்து ஓர் இமைப் பொழுதும் இருக்க முடியவில்லை. இனி நான் வாழ்ந்தாலும் இவளை ஆசை நாயகியாக வைத்துக் கொண்டுதான் வாழ்வது; இறந்தாலும் இவளுடைய மடியின் மேல் தலையை வைத்தே உயிரை விடுவது. இவள் அவ்வளவு தூரம் என் ஆசையையும் உயிரையும் கொள்ளை கொண்டு விட்டாள்.

இது நிற்க, நேற்று காலையில் நான் இங்கே வருவதற்கு முன் என்னுடைய அம்மாளிடத்தில் பேசிக் கொண்டிருந்து பணம் வாங்கிக் கொண்டு வந்தேன்; நான் பாலாம்பாளுக்கு எழுதிக் கொடுத்திருக்கிற பத்திரத்தை அவளுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு, வந்துவிடவும், பாலாம்பாளுடைய நட்பை இவ்வள வோடு நிறுத்திக் கொள்ளவும், அவர்கள் என்னிடத்தில் சொன்னார் கள். நான் அதற்கு இணங்காமல் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து கொடுத்து விடுவேன் என்று பயமுறுத்தினேன். அவர்கள் உடனே படிமானத்துக்கு வந்ததன்றி பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்ய வேண்டாம் என்றும், என் மனம் திருப்தியாகும் வரையில் இப்போது இருப்பது போலவே அவளிடத்தில் நட்பாக இருந்து வரலாம் என்றும் சொன்னார்கள். அவர்கள் மனப்பூர்வமாக அப்படிச் சொன்னார்களா, அல்லது கபடமாக அப்படிச் சொன் னார்களா என்ற சந்தேகம் என் மனசில் இருந்து வந்தது; இன்று காலையில் எனக்குத் தேனாம்பேட்டையிலிருந்து செய்தி கிடைத் திருப்பதைப் பார்க்க, அவர்கள் கபட்டுத் தனமாகவே, அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/200&oldid=645995" இலிருந்து மீள்விக்கப்பட்டது