பக்கம்:மதன கல்யாணி-2.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 201

பெண்ணிற்கும் வீணை வித்துவான் மதன கோபாலனுக்கு ஏதோ காரணம் பற்றி பகைமை இருந்ததனால், அதைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டே அந்தப் பெண் தனது உதவியை நாடினாள் என்ற விஷயம் அவனுக்கு ஒருவாறாகத் தெளிவாயிற்று; ஆனால், மாரமங்கலத்தாரது பங்களாவில், மதன கோபாலன் கல்யாணியம்மாளிடத்தில் விபரீதமாக நடந்து கொண்டான் என்ற விஷயமும், அதனால், பெரிய மனிதர்கள் எல்லோரும் அவனை விலக்கிவிட்டார்கள் என்ற விஷயமும் அவனுக்குத் தெரிந்தவை ஆதலால், அதற்கும் இதற்கும் சம்பந்தமிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்து மதனகோபாலன் கல்யாணியம்மாளிடத்தில் தாறுமாறாக நடந்து கொண்ட விஷயத்தில், அவனை, நேரான வழியில், தக்கபடி தண்டிப்பதற்கு நினைப்பதே மனித இயற்கை யன்றி, அவ்வாறு சுற்று வழியாகத் தண்டிக்க முயன்ற விஷயம் சந்தேகத்திற்கிடமான தெனத் தோன்றியது. ஆகவே, கல்யாணி யம்மாள் அந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பாளோ என்ற பெருத்த சந்தேகம் அவனது மனதில் எழுந்தது; அதனால், அவன் ஒரு நாழிகை நேரம் வரையில் சிந்தனையில் ஆழ்ந்து கிடந்து அதன் பிறகு எதையோ நினைத்துக் கொண்டவன் போல சடக்கென்று எழுந்து, வெள்ளைக்கார உடைகளை வைத்த பெட்டியைத் திறந்து, அந்த மூட்டையை வெளியிலே எடுத்து அதைப் பிரித்து உடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து மிகவும் கூர்மையாக உற்று நோக்கினான். மார்பின் மீது அணிந்து கொள்ளும் கெளன் என்ற ஆடையில் கழுத்தைச் சுற்றிலுள்ள பாகத்தின் ஒரு மூலையில் அச்சியற்றப்பட்ட ஒரு துண்டுத் துணி வைத்து தைக்கப்பட்டிருக்கக் கண்டான்; அந்த உடைகள் மவுண்டு ரோட்டிலுள்ள ரென் பென்னெட் (Wrenri Bennet) கம்பெனியாரால் தைத்து விற்கப்பட்டதென்ற எழுத்துக்களும் 9769 என்ற இலக்கமும் அங்கே காணப்பட்டன; அந்த விவரத்தைக் காணவே, அவன் சிறிதளவு சந்தோஷமும், நம்பிக்கையும் அடைந்தவனாய், திரும்பவும் உடைகளை எல்லாம் காகிதத்தில் வைத்து வெளியில் தெரியாதபடி மூட்டையாகக் கட்டி, வைத்துக்கொண்டு வேலைக்காரனை அழைத்து, ஸாரட்டு வண்டியைப் பூட்டத் தயாராக வைக்கும்படி உத்தரவு செய்து அவனை அனுப்பிவிட்டு, நல்ல உடைகளாக எடுத்து அணிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/205&oldid=646004" இலிருந்து மீள்விக்கப்பட்டது