பக்கம்:மதன கல்யாணி-2.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 மதன கல்யாணி

கொண்டு, துரையம்மாளால் எழுதப்பட்ட இரண்டு கடிதங்களையும் அவளால் அனுப்பப்பட்ட வைரப் பதக்கத்தை யும், இப்போது மாரமங்கலம் மைனரால் எழுதப்பட்டிருந்த கடிதத்தையும் எடுத்து சட்டையின் உள்புறப் பையில் ஜாக்கிரதை யாக வைத்துக்கொண்டு காகித மூட்டையைக் கையில் பிடித்தவனாய் வெளியில் வந்தான். அதற்குள் பங்களாவின் வாசலில், அவனது ஸாரட்டு வண்டி ஆயத்தமாக நிறுத்தப் பட்டிருந்தது; அவன் உடனே அதற்குள் ஏறி உட்கார்ந்து கொண்டு, மவுண்டு ரோட்டில் உள்ள ரென் பென்னெட் என்ற வெள்ளைக்காரர் கம்பெனிக்கு ஒட்டும்படி சாரதியிடத்தில் கூற, அவன் அவ்வாறே ஓட்டத் தொடங்கினான். அரை நாழிகை நேரத்தில் வண்டி அந்தக் கம்பெனியின் வாசலில் வந்து நின்றது; துரைராஜா வண்டியை விட்டுக் கீழே இறங்கி, காகித மூட்டையை எடுத்துக் கொண்டு கம்பெனிக்குள் நுழைந்து, அதன் மானேஜரைக் கண்டு சலாம் செய்து, “ஐயா! நான் நேற்று ராத்திரி மவுண்டு ரோட்டின் வழியாக, தேனாம்பேட்டையில் உள்ள என்னுடைய பங்களாவுக்குப் போய்க் கொண்டிருந்த போது, இந்த மூட்டை வழியிலே கிடந்து அகப்பட்டது. இதை நான் எடுத்துக் கொண்டு போய் என்னுடைய பங்களாவில் பிரித்துப் பார்த்தேன். இதற்குள் வெள்ளைக்கார ஸ்திரீதரித்துக் கொள்ளத் தேவையான ஒரு ஜோடிப்பு உடைகள் இருக்கின்றன. கெளன் என்ற உடையின் கழுத்துப் பக்கத்தில் உங்களுடைய கம்பெனியின் பெயரும், ஏதோ ஒரு இலக்கமும் இருக்கின்றன. ஆகையால், இவைகளை இங்கே கொண்டு வந்தால் கணக்கைப் பார்த்து, இவைகள் யாருக்கு விற்கப்பட்டன என்பதை அறிந்து கொண்டு, அவரிடத்துக்கு அனுப்பிவிடலாம் என்ற எண்ணத் தோடு நான் நேராக இங்கு வந்தேன். தங்களுக்கு சிரமம் கொடுக்க நேர்ந்ததைப் பற்றி வருந்துகிறேன்; விஷயம் பரோபகாரமானது ஆகையால் நீங்கள் என்மேல் ஆயாசப்பட மாட்டீர்கள் என்று நினைத்து உங்களைக் கேட்கத் துணிந்தேன். மன்னிக்க வேண்டும்” என்று நயமாகப் பேச, அதைக் கேட்ட மானேஜர் சந்தோஷமும் உற்சாகமும் அடைந்தவராய் ஒரு நாற்காலியைக் காட்டி, அதன்மேல் உட்கார்ந்து கொள்ளும்படி துரைராஜாவை மரியாதை யாக உபசரித்தபின் அவன் கொணர்ந்திருந்த காகித மூட்டையை வாங்கிப் பிரித்து, அதற்குள் இருந்த மார்பங்கியை எடுத்து, அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/206&oldid=646006" இலிருந்து மீள்விக்கப்பட்டது