பக்கம்:மதன கல்யாணி-2.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 மதன கல்யாணி

இருந்த முட்டையை சாரதி இடத்தில் கொடுத்து, தான் உள்ளே போய் விட்டு வருகிற வரையில் அதை வைத்துக் கொண்டிருக்கும் படி சொல்லி விட்டு உள்ளே நுழைந்தான்; அவன் அந்த பங்கள விற்கு அடிக்கடி வந்தவனன்று; ஆனால், அவன் மைனரது நண்பன் என்பது பற்றி, எப்போதாகிலும், இரண்டொருமாத காலத்திற்கு ஒரு முறை அவனோடு கூடவோ, அல்லது, அவனைப் பார்க்கும் பொருட்டோ வருவது வழக்கம். அவனது தங்கையான கண்மணியம்மாளை மைனர் மணந்து கொள்ளப் போகிறான் என்ற விஷயத்தை அந்த பங்களாவில் இருந்தோர் யாவரும் அறிந்து துரைராஜாவிடத்தில் மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் ஆதலால், அவனைக் கண்ட வேலைக்காரர்கள், கையெடுத்துக் கும்பிட்டு மிகவும் பிரியத்தோடு வணங்க, துரைராஜா புன்னகையாலும் மகிழ்ச்சியினாலும் மலர்ந்த முகத்தின னாய் அவர்களை நோக்கி, “எஜமானியம்மாளுடைய சமயம் எப்படி இருக்கிறது? நான் உள்ளே போகலாம் அல்லவா?” என்றான். அதைக் கேட்ட ஒரு வேலைக்காரி, “இன்றைய தபாலில் வந்த காகிதங்களை எல்லாம் தபால்காரன் இப்போது தான் கொடுத்து விட்டுப் போனான். அவைகளை எஜமானியம்மாளி டத்தில் கொடுத்துவிட்டு, நான் இப்போது தான் வருகிறேன்; அவர்கள் தபாலைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் போய் நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று சொல்லட்டுமா?” என்று மிகுந்த குதுகலத்தோடு கேட்க, துரைராஜா அதற்கு அனுமதி கொடுக்க, அவள் உடனே ஒட்டமாக ஓடி, இரண்டொரு நிமிஷத்தில் திரும்பி வந்து, “நான் போய்ச் சொன்னேன். வந்த காகிதங்களில் அரைப்

ங்கு தான் எஜமானியம்மாள் படித்தார்கள்; இன்னம் அரைப் பங்கு படிக்கப்படவில்லை; நான் சொன்னவுடனே அவர்கள் கொஞ்ச நேரம் யோசனை செய்து விட்டு, உடனே என்னைப் பார்த்து, உங்களை அழைத்தக் கொண்டு வரச் சொன்னார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட துரைராஜா மிகுந்த சந்தோஷம் அடைந்தான். ஏனெனில், கல்யாணியம்மாள் முன் எச்சரிக்கையாக நடக்க எண்ணி, தன்னைப் பார்க்க அப்போது சமயம் சரிப்படவில்லை என்று சொல்லிவிடுவாளோ என்ற அச்சம் அவனது மனத்தில் இருந்தது; தான் வந்திருப்பதை வேலைக்காரி சொல்ல உணர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/208&oldid=646009" இலிருந்து மீள்விக்கப்பட்டது