பக்கம்:மதன கல்யாணி-2.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 205

கொண்டு சிறிது நேரம் யோசனை செய்த பிறகே அழைத்து வரச் சொன்னாள் என்ற விஷயம், சந்தேக ஆஸ்பதமாக இருந்தது. இருந்தாலும், அவன் அதைக் காட்டிக் கொள்ளாமல், கல்யாணி யம்மாளது விசாலமான அழகிய அந்தப்புரத்திற்குள் நுழைந்து, அவளது முகத்தை நோக்கி தனது இயற்கைப்படி புன்னகையும் சந்தோஷமும் தோற்றுவிக்க, அந்த அம்மாள் உடைக்கப்படாமல் தனக்கருகில் கிடந்த சில தபாற் கடிதங்களை எல்லாம் எடுத்து ஒரு பக்கமாக வைத்துவிட்டு, சரியாக உட்கார்ந்து கொண்டு, “வா, தம்பீ அப்படி நாற்காலியில் குந்து” என்று மிகுந்த அன்போடு கூறி, மிகவும் துரத்தில் கிடந்த ஒரு நாற்காலியைச் சுட்டிக் காட்டினாள். துரைராஜா, “வருகிறேன்” என்று புன்னகையோடு மறுமொழி கூறிய வண்ணம், தபால்களைப் படிக்கிற சமயம் போலிருக்கிறது; நான் அசந்தர்ப்ப வேளையில் வந்துவிட்டேன்” என்றான். அதற்கு முன் தன்னிடத்தில் மிகுந்த பயபக்தியோடு நடந்து கொள்பவனும், துணிந்து பேசுவதற்கும் அஞ்சுகிறவனுமான அவன் அவ்வளவு பழக்கமும் உரிமையும் பாராட்டி, அருகில் வந்து உட்கார்ந்து பேசத் தொடங்கியதைக் கண்ட கல்யாணியம்மாளது அழகிய முகம் சடக்கென்று மாறுபட்டது; அன்பினால் மலர்ந்த முகமும் ஆயாசத்தினால் சுருங்கியது; அவள் உடனே கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, “ஏது, தம்பி இவ்வளவு தூரம் வந்தது! ஏதாவது அவசரமான ஜோலி இல்லாமல் இப்படி வந்திருக்க மாட்டாய் என்றே நினைக்கிறேன்” என்று மிகுந்த வியப்போடு கூறிய வண்ணம், எழுந்து போய் சற்று துரத்திலிருந்த வேறோர் ஆசனத்தின் மேல் அமர்ந்தாள். உடனே, துரைராஜா மிகவும் நயமான கொஞ்சிய குரலில் பேசத் தொடங்கி, “நான் இன்ன ஜோலி யாகத் தான் வந்திருப்பேன் என்று நானே சொல்ல வேண்டுமா? நீங்கள் ஏற்படுத்திய முதலாவது பரிட்சையில் நான் தேறிவிட்டேன் என்கிற சங்கதி உங்களுக்குத் தெரிந்திருக்குமோ இராதோ என்ற சந்தேகங் கொண்டு, நானே நேரில் வந்து அதைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலோடு ஓடிவந்தேன். உங்களுக்கு இடைஞ்சலாக இருந்த அந்தத் துஷ்டனுடைய காலைப் பார்த்து சுட்டு விட்டேன். அவன் இனிமேல் ஆறுமாச காலத்துக்கு வீட்டை விட்டு வெளியே வரமாட்டான். இந்த முதலாவது பரீட்சையில் நான் தேறினால் தான் நான் சரியான பிரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/209&oldid=646011" இலிருந்து மீள்விக்கப்பட்டது