பக்கம்:மதன கல்யாணி-2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206. மதன கல்யாணி

வைத்திருக்கிறேன் என்பது தெரியும் என்று அன்றிரவு நீங்கள் சொன்னிகள் அல்லவா? நான் இந்த முதலாவது பரிட்சையில் தேறியதோடு இரண்டாவது பரிட்சையிலும் தேறிவிட்டேன். மிகவும் ரகசியமாக மறைந்திருந்து இவ்வளவு காரியம் செய்தது யார் என்பதையும், நான் உங்களுடைய தயவில்லாமலேயே தெரிந்து கொண்டு விட்டேன். நான் துரையம்மாளின் மேல் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறேன் என்பது இதனால் இன்னமும் அதிகமாக விளங்குகிறதல்லவா? இதுவே இரண்டாவது பரிட்சையில் தேறியது. இன்றிரவு எனக்குக் கொடுப்பதாகச் சொன்ன சன்மானம் கிடைக்கும் அல்லவா? இனிமேலும் ஏதாவது ஆட்சேபனை உண்டா?” என்றான்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் கரைகடந்த வியப்பும் திகைப்பும் கொண்டவள் போல நடித்து நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து, மிகவும் கொடுரமான பார்ன்வையாக அவனைப் பார்த்து, “என்ன ஆச்சரியம் இது! நீ வந்த உடனே வழக்கத்துக்கு மாறாக, எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாய். இப்போது நீ பேசுகிற வார்த்தைகள் எல்லாம் ஒன்றும் விளங்காமல் தாறுமாறாக இருக்கின்றன: நேற்று ராத்திரி, நீ அந்த மதனகோ பாலனைச் சுட்டுக் கொன்று விட்டதாக என்னுடைய வேலைக் காரர்கள் எல்லோரும் வந்து சொன்னார்கள். அந்த பிரம்மஹத்தி தோஷத்தினால், உன்னுடைய புத்தி இப்படி மாறிப் போய் விட்டதா என்னுடைய வேலைக்காரர்களைக் கூப்பிட்டு, உன்னை அழைத்துக் கொண்டு போய் பத்திரமாக ஜாகையில் சேர்க்கச் சொல்லுகிறேன்” என்று கூறிய வண்ணம், வேலைக் காரியை அழைக்கும் கருத்தோடு வாசல் பக்கத்தில் தனது முகத்தைத் திருப்பினாள். அதை உணர்ந்து கொண்ட துரைராஜா வும் கரைகடந்த வியப்பும் திகைப்பும் அடைந்தான் ஆனாலும், கல்யாணியம்மாளை நோக்கி, “நம்முடைய ரகசியங்களை எல்லாம் வேலைக்காரர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குமானால், அவர்களைக் கூப்பிடலாம்; தடையில்லை. அவர்களிடத்தில், நான் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னால் என்னுடைய புத்தி மாறாட்டம் அடைந் திருப்பதாக அவர்கள் ஒருநாளும் நினைக்கவே மாட்டார்கள் என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/210&oldid=646014" இலிருந்து மீள்விக்கப்பட்டது