பக்கம்:மதன கல்யாணி-2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 மதன கல்யாணி

போய், என்ன மறுமொழி சொல்வதென்பதை அறியமாட்டாமல், அப்படியே உட்கார்ந்து விட்டான். இருந்தாலும், சற்று நேரத்தில் துணிவடைந்தவனாய், “அம்மணி அப்படியானால், துரையம்மா ளால் எழுதப்பட்டுள்ள இரண்டு கடிதங்களும் நாங்களே தயாரித் துக்கொண்ட பொய்க் கடிதங்கள் என்றும், வெள்ளைக்காரியின் உடைகளையும் நாங்களே கொண்டு வந்து பெட்டியில் வைத்த வர்கள் என்றும் சொல்லுகிறீர்கள் போலிருக்கிறது! அதுவும் நல்ல காரியங்களை எல்லாம் நடத்தத் துணிகிறவர்களுக்கு, அவற்றில் அகப்பட்டுக் கொள்ளாமல் தந்திரமாகத் தப்பித்துக் கொள்வது தானா ஒரு பெரிய காரியம் இதெல்லாம் இருக்கட்டும். இந்த மாதிரி யான வெள்ளைக்கார உடுப்புகளை அனுப்பும்படி நீங்கள் கையெழுத்திட்டு ரென் பென்னெட் கம்பெனிக்குக் கடிதம் எழுதி ஒரு குமாஸ்தாவிடத்தில் கொடுத்தனுப்பி, அந்த உடைகளை வாங்கிக் கொண்டு வரச் செய்திருக்கிறீர்களே! அதுவும் நாங்கள் செய்த வேலைதானோ?” என்றான்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், நாகப்பாம்பு படத்தை விரித்து நிமிர்வது போல நிமிர்ந்து பார்த்து மிகுந்த கோபத்தோடு, “அடாடா என்னென்ன காரியங்களை எல்லாம் செய்திருக்கிறீர் கள் கடைசியாக என்னுடைய கையெழுத்தைப் போல தப்புக் கையெழுத்து (Forgery) செய்து எனக்குப் பதிலாக நடவடிக்கை கள் நடத்தவும் ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறதே! ஏதேது இது படுமோசமாக இருக்கிறதே! என்னுடைய கையெழுத்தைப் போட்டு நீங்கள் இன்னமும் என்னென்ன காரியங்களை எல்லாம் செய்திருக்கிறீர்களோ தெரியவில்லையே! சரி, சரி; இனிமேல் உங்களை நான் சும்மா விட்டிருந்தால், குடிகெட்டுப் போய் விடும். இப்போதே நான் அந்த ரென் பென்னெட் கம்பெனிக்கு எழுதி, அந்தக் கடிதத்தை வரவழைத்து போலிஸாரிடத்தில் கொடுத்து தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளச் செய்கிறேன். முதலில், நீ இங்கே வந்த போது, உனக்கு ஒரு வேளை புத்தி மாறாட்டம் ஏற்பட்டிருக் குமோ என்று சந்தேகப்பட்டேன். அப்படிப்பட்ட சந்தேகத்துக்கு இடமில்லை என்பது இப்போது தான் நிச்சயமாகத் தெரிகிறது. நீயும் மைனருமாகச் சேர்ந்து கொண்டு இந்தத் தேவடியாள் முண்டைகளின் சிநேகம் நிலைத்திருப்பதற்காக வேண்டி, ஏதேதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/222&oldid=646037" இலிருந்து மீள்விக்கப்பட்டது