பக்கம்:மதன கல்யாணி-2.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 223

ஆவண்ண செட்டியார் வருவதாக வாக்களித்திருந்ததன் நினைவு தோன்றியது. அவன் உடனே நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்க்க, அப்போது பன்னிரண்டரை மணி ஆகி இருந்தது; அவன் உடனே படுக்கையை விட்டுத் துள்ளி எழுந்து விரைவாகக் கீழே சென்று ஸ்நானம் போஜனம் முதலியவற்றை அதிதுரிதத்தில் முடித்துக் கொண்டு, சில வேலைக்காரர்களை அழைத்து, பணம் கொடுத்து கடைக்குப் போய் பசவண்ண செட்டியாரை உபசரிப் பதற்குத் தேவையான சிற்றுண்டிகள், தாம்பூலாதிகள் முதலிய வஸ்துக்களை வாங்கி வரும்படி அனுப்பிவிட்டு, அவர் வந்திறங்கினால், மிகுந்த மரியாதையோடு அவரை உடனே மேன்மாடத்திற்கு அழைத்து வரும்படி உத்தரவு செய்து விட்டு மேலே சென்றான். அப்போது ஒரு மணிக்கு ஐந்து நிமிஷ நேரமே மிகுதி இருந்தது. செட்டியார் அதிசீக்கிரத்தில் வந்து விடுவார் என்ற நினைவினாலும், ஆவலினாலும், அவனது மனம் துடித்துக் கொண்டிருந்ததால், கல்யாணியம்மாளை பற்றிய நினைவு பின்னடைந்தது. அந்த நிலைமையில் கடிகாரம் ஒரு மணியடித்தது. பசவண்ண செட்டியார் மிகுந்த சந்தோஷத்தினாலும் புன்னகையினாலும் மலர்ந்த முகத்தினராய் அந்த அறைக்குள் நுழைந்தார்.


24-வது அதிகாரம்

வக்கீல் நோட்டீஸ்

ஒரு நிமிஷ நேரம் முன்னாகவ்ாகிலும் பின்னாகவாகிலும் வந்தவர் என்பதின்றி சரியாக ஒரு மணிக்கு அவர் வந்ததைக் கண்ட துரைராஜா அளவற்ற வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தவனாய், அவர் நிரம்பவும் கண்டிப்பான மனிதர் என்று தனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டவனாய், எழுந்து கைகுவித்து வணங்கி, “வர வேண்டும்; வரவேண்டும். இப்படி இந்தச் சாய்மான நாற்காலியில் உட்கார வேண்டும்” என்று மிகுந்த உவப்போடும் மரியாதை யோடும் உபசரிக்க, செட்டியார் அப்படியே உட்கார்ந்து கொண்ட வராய், அவனை நோக்கி, “என்ன உங்களுடைய முகம் ஒரு மாதிரியாக இருக்கிறதே! உங்களுக்கு வேறே ஏதாவது அவசரமான

lm.5.ii-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/227&oldid=646046" இலிருந்து மீள்விக்கப்பட்டது